திடீரென்று கிளம்பிய கரும்புகை.. விடாமல் அடித்த எச்சரிக்கை அலாரம்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட Go First flight..

Published : Aug 12, 2022, 06:33 PM IST
திடீரென்று கிளம்பிய கரும்புகை.. விடாமல் அடித்த எச்சரிக்கை அலாரம்.. அவசரமாக தரையிறக்கப்பட்ட Go First flight..

சுருக்கம்

பெங்களூரில் இருந்து புறப்பட்ட கோ ஃபர்ஸ்ட் விமானத்திலிருந்து திடீரென்று வெளியான கரும்பு புகை காரணமாக, கோயம்புத்தூரில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.  

பெங்களூரில் இருந்து மாலத்தீவில் உள்ள மாலிக்கு கோர் ஃபர்ஸ்ட் விமானம் 92 பயணிகளுடன் புறப்பட்டது. இந்நிலையில் விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் திடீரென்று ஆபத்து எச்சரிக்கை அலாரம் எழுப்பட்டது. அதாவது விமானத்தின் அவில் வெப்பமானால் ஒலிக்கும், எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. மேலும் விமானத்திலிருந்து திடீரென்று கரும்புகை எழுந்தது. 

மேலும் படிக்க:எல்.இ.டி பல்பை விழுங்கிய 10 மாத குழந்தை.. மூச்சு குழாயில் சிக்கிய பல்பு.. ஒரு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சை..

இதனையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கோவை சுற்றுவட்டாரத்தில் விமானம் பறந்துக்கொண்டிருந்ததால், விமான கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு , கோவை விமான நிலையத்தில் மதியம் 12.57 மணியளவில் அவசரமான விமானம் தரையிறக்கப்பட்டது. அங்கு  தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் விமானத்தில் தீப்பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று கூறப்படுகிறது. 

பயணிகள் அனைவரும் பத்திரமாக விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டனர். பின்னர் ஆய்வு செய்த கோ ஃபர்ஸ்ட் விமானத்தின் பொறியாளர்கள் குழு, அலாரம் பழுதடைந்துள்ளதால் தவறுதலாக ஒலித்ததாகவும், விமானத்தின் என்ஜினில் எந்த பழுதும் இல்லை என்றும் தற்போது விமான பறக்கத் தகுந்ததாக இருப்பதாகவும் அறிவித்தனர். பின்னர் இரட்டை என்ஜின்கள் அதிக வெப்பமடைந்ததாகக் காட்டும் அலாரம் ஒலி அணைக்கப்பட்டது. அதற்குரிய சில நடைமுறைகளை செய்த பின்னர், விமானம் மீண்டும் மாலி நாட்டிற்கு புறப்பட்டது.

மேலும் படிக்க:கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்… எச்சரிக்கை விடுத்த போக்குவரத்துத் துறை அமைச்சர்!!

இதை போல், கடந்த வாரம், வியாழக்கிழமை புறப்பட்ட சில நிமிடங்களில் கோ ஃபர்ஸ்ட் விமானம் பறவை தாக்கியதால் உடனடியாக தரையிறக்கப்பட்டது. கடந்த மாத தொடக்கத்தில், டெல்லி மற்றும் கவுகாத்தி இடையேயான கோ ஃபர்ஸ்ட் விமானத்தின் கண்ணாடியில் மோசமான வானிலை காரணமாக நடுவானில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

பல தொழில்நுட்ப கோளாறு சம்பவங்களை தொடர்ந்து, விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, விமானத்தின் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்யுமாறு ,விமான நிறுவனங்களை கேட்டுக்கொண்டார்.  சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) மற்றும் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பானது, அனைத்து விமானங்களிலும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தினால் உரிய அங்கீகாரம் அட்டையை பெற்றிருக்கும் ஊழியர்களை மட்டும் அமர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
ஆட்டம் ஆரம்பம்..! நேற்று ராஜாஜி... இன்று சுப்பிரமணிய பாரதி.. தமிழர்களுக்கு மோடி மரியாதை