
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் அரை மொட்டை அடித்து நூதன முறையில் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் , வறட்சி நிவாரண நிதி, பயிர்காப்பீடு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் தமிழக விவசாயிகள் 21 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாம்புக்கறி, எலிக்கறி, தற்கொலை முயற்சி, உடலில் சேற்றை பூசுதல் என நாளுக்கு நாள் விவசாயிகளின் போராட்டம் வீரியமடைந்து வருகிறது.
இந்த வகையில் விவசாயிகளை மொட்டை அடிக்க வேண்டாம் என்பதை மத்திய மாநில அரசுகளுக்கு உணர்த்தும் வகையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது தலை முடியை பாதி மொட்டை அடித்து எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளது.