அரசு மருத்துவமனையின் தரம் தாழ்ந்து போகிறதா? - சந்தேகப்பட வைக்கும் அதிர்ச்சி மரணங்கள்!

 
Published : Apr 02, 2017, 09:04 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
அரசு மருத்துவமனையின் தரம் தாழ்ந்து போகிறதா? - சந்தேகப்பட வைக்கும் அதிர்ச்சி மரணங்கள்!

சுருக்கம்

Women Death after family planing operation at karur goverment hospital

கரூர் அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் போது இளம்பெண் உயி்ரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 கரூரை சேர்ந்த  நகுல்சாமி மனைவி லாவண்யா. குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கபட்டிருந்தார். 
அறுவை சிகிச்சையின் போது லாவண்யாவுக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டு பிராண வாயு செலுத்தப்பட்டது. அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக லாவண்யா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். லாவன்யாவின் இறப்பிற்கு அரசு மருத்துவர்கள் தான் காரணம் என்று அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிடதுடன் சாலைமறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

PREV
click me!

Recommended Stories

பிரதமர் மோடி சர்ச்சுக்கு போய்ட்டாரு.. ஸ்டாலின் எப்போ இந்து கோயிலுக்கு போவாரு? தமிழிசை கேள்வி!
பாஜக ஆட்சியில் 74% அதிகரித்த வெறுப்பு பேச்சு.. மக்களை பிளவுபடுத்தி குளிர்காய நினைப்பதா..? ஸ்டாலின் ஆவேசம்