இவங்க வேற லெவல் - மக்களே உஷாரா இருந்துக்கோங்க

 
Published : Apr 02, 2017, 08:45 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
இவங்க வேற லெவல் - மக்களே உஷாரா இருந்துக்கோங்க

சுருக்கம்

Fake Journalist areest at erode district


ஈரோட்டில் சாயப்பட்டறை அதிபரிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் பறிக்க முயன்ற இரண்டு போலி செய்தியாளர்களை போலீசார் கைது செய்தனர்.

சேலத்தை சேர்ந்த ரத்தீஸ் மற்றும் கொமராபாளையத்தை சேர்ந்த பிரபாகரன் ஆகிய இருவரும் ஈரோட்டில் தங்கராஜீ என்பவருக்கு  சொந்தமான  சாயப்பட்டறைக்குச் சென்றுள்ளனர். இருவரும் தங்களை தனியார் தொலைக்காட்சியின்  செய்தியாளர்கள் என அறிமுகம் செய்து கொண்டு ஆலையில் சுத்திகரிக்கப் படாத கழிவு  நீர் வெளியேற்றப்படுவதாகவும், அதனால் நிலத்தடி வளம் கெடுவதாகவும்  கூறியுள்ளனார்.

மேலும் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரை தங்களது  ஒளிப்பதிக்கருவிகளில் பதிவு செய்துள்ளதாக கூறி தங்கராஜைக் மிரட்டியதுடன் செய்தி ஒளிப்பரப்பாமல் இருக்க 12-லட்சம் ரூபாய் கேட்டுள்ளனார்.

பயந்து போன தங்கராஜ் 10 லட்சம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார்.  பின்னர் தங்கராஜீக்கு இவர்கள் மீது சந்தேகம் எழ  அடையாள அட்டையை வாங்கி பரிசோதித்தார். அப்போது அவை போலியானது என்பது  தெரிய வந்தது.  வீரப்பன்சத்திரம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் இவர்கள் இருவரும் இதே பகுதியில் பல சாயப்பட்டறை அதிபர்களை மிரட்டி பல முறை பணம் பறித்தது தெரியவந்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

சைக்கிள், பைக்கில் இடியாப்பம் விற்கிறீங்களா? உணவுப் பாதுகாப்புத் துறை போட்ட அதிரடி உத்தரவு!
அஜிதா ஆக்னஸ் தற்கொ*லை முயற்சி?.. விஜய்யை சந்திக்க முடியாததால் விபரீத முடிவு.. பரபரப்பு தகவல்!