கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி தில்லி கைது.. கோவை போலீசார் அதிரடி நடவடிக்கை..

By Ramya s  |  First Published Jun 27, 2023, 11:27 AM IST

கோவை மாநகரில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி தில்லியை கோவை மாநகர போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.


கடந்த பிப்ரவரி மாதம் கோவையில் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்கள் தமிழ்நாட்டையே உலுக்கின. பிப்ரவரி 12-ம் தேதி, கோவை மாநகர் பாப்பநாயக்கன்பாளையத்தில் சத்யபாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டார். இவர் 2020-ம் ஆண்டு பிஜு என்ற இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தவர். அந்த சம்பவத்திற்கு பழி தீர்க்கும் விதமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த கொலை குறித்து கோவை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மலக்குழி மரணங்களில் தமிழகம் தான் முதலிடம் - தேசிய ஆணைய தலைவர் வேதனை

Latest Videos

இந்த கொலையின் முக்கிய குற்றவாளி ராஜா கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த  விசாரணையில் பிரபல ரவுடி தில்லி என்ற தில்ஜித்க்கு இந்த கொலையில் தொடர்பு இருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. கோவை போலீசாரால் இந்த வழக்கில் தில்லி தேடப்பட்டு வந்தார். கோவை  நகர் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ரவுடிகள் மத்தியில் தில்லி மிகவும் பிரபலமானவர் என்று போலீசார் தெரிவித்தனர். கேரளாவைச் சேர்ந்த தில்லி என்பவர், பல கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து பேசிய போலீசார் “ காமராஜபுரம் கவுதம் மற்றும் அவரது கூட்டாளிகள் உட்பட 60க்கும் மேற்பட்ட ரவுடிகளை கைது செய்துள்ளோம். தில்லியைப் பற்றி அவர்களுக்கு நன்றாகத் தெரியும், மேலும் 2018-ல் இருந்து தில்லி கோவைக்கு வரவில்லை என்பது எங்களுக்குத் தெரிந்தது. இருப்பினும், அவர் தனது குழு உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள சில மொபைல் பயன்பாடுகளைப் பயன்படுத்துகிறார். அதனால், அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.” என்று கூறியிருந்தனர்.

இந்த நிலையில் கோவை மாநகரில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடி தில்ஜித் என்ற தில்ஜித்தை கோவை மாநகர போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர். போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற அவருக்கு இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் மலம், சிறுநீர் கழித்த பயணி கைது..

click me!