
Chennai corporation pet license fine ; தினந்தோறும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாய் தொல்லையால் அவதியுற்று வருகிறார்கள். சிறுவர்களை நாய்களை சூழ்ந்து கொண்டு கடிப்பதால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. ரேபிஸ் போன்ற நோய்களும் பரவி வருகிறது. இதனால் தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளாலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட இனத்தை சேர்ந்த நாய்களை வீட்டில் வளர்ப்பதால் முதியவர்களை கொலை செய்யும் அளவிற்கு நாய்கள் கொடூரமாக மாறி வருகிறது.
மேலும் பூங்காக்கள், பொது இடங்களுக்கு சர்வ சாதாரணமாக எந்த வித கவசமும் இல்லாமல் நாய்களை அழைத்து செல்லும் நிலையும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழகம் முழுவதும் அந்த மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் வீட்டில் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கு உரிய உரிமம் பெறவில்லையென்றால் 5ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று மேயர் பிரியா தலைமையில் சென்னை மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மொத்தம் 71 தீர்மானங்கள் கொண்டுரவப்பட்டது. அதில் முக்கியமாக சென்னை மாநகராட்சி பகுதியில் வீடுகளில் செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெறாவிட்டால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மேலும் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை பொது இடங்களில் அழைத்து செல்லும் போது கழுத்து பட்டை இன்றி அழைத்து சென்றால் உரிமையாளருக்கு 500 ரூபாய் அபராதம் விதிகப்படும் எனவும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுஇடங்களில் செல்லப்பிராணிகள் அழைத்து செல்லும் போது பொதுவெளியில் கழிவு ஏற்படுத்த உரிமையாளர்கள் அனுமதிக்க கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பொது இடங்களில் செல்லப்பிராணிகள் கழிவு ஏற்படுத்தினால், அதனை சுத்தம் செய்வது உரிமையாளரின் கடமை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை வருகிற நவம்பர் 24ம் தேதி முதல் அமல்படுத்த சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது