Normal 0 false false false EN-IN X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0cm 5.4pt 0cm 5.4pt; mso-para-margin-top:0cm; mso-para-margin-right:0cm; mso-para-margin-bottom:8.0pt; mso-para-margin-left:0cm; line-height:107%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:"Times New Roman"; mso-bidi-theme-font:minor-bidi; mso-fareast-language:EN-US;}விழுப்புரம், விழுப்புரத்தில் அதிரடியாக சோதனை நடத்தியதில் கலப்பட எண்ணெய் தயாரித்த ஆலையைப் பூட்டி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இது தொடரும் என்றும் எச்சரித்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணெய் உற்பத்தி ஆலைகளில் கலப்பட எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.இதனையடுத்து ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் வெள்ளிக்கிழமை மாலை விழுப்புரம் மகாராஜபுரம், தாமரைக்குளம் பகுதிகளில் உள்ள எண்ணெய் ஆலைகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் வரலட்சுமி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கரலிங்கம், சமரேசன், கதிரவன், முருகன் ஆகியோர் சோதனை நடத்தினர்.தாமரைக்குளத்தில் உள்ள ஒரு ஆலையில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்படும் கடலைகள் அனைத்தும் காலாவதியான கடலைகள் என்பதும், இந்த கடலைகளுடன் நொய் அரிசியை சேர்த்து அரைத்து கலப்படம் செய்ததும் கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் சுகாதார வசதியின்றி எண்ணெய் தயாரித்து வந்ததும் தெரியவந்தது.இதனை தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த கரிமுல்லாகான் என்பவர் இந்த எண்ணெய் உற்பத்தி ஆலையை நடத்தி வந்ததும், கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்று கலப்பட எண்ணெய் தயாரித்து சந்தைகளில் விற்பனை செய்ததும் தெரியவந்தது. 50 கிலோ எடை கொண்ட 175 மூட்டை கடலைகள், 100 மூட்டை நொய் அரிசி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட இவற்றின் மதிப்பு ரூ.10 இலட்சம் இருக்கும். தொடர்ந்து, அந்த ஆலையை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.இதுகுறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் வரலட்சுமி, “எண்ணெய் ஆலையில் சோதனை நடத்தியதில் கலப்பட எண்ணெய் தயாரிக்கப் பயன்படுத்திய ரூ.10 இலட்சம் மதிப்பிலான கடலைகள், நொய் அரிசி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்.இவற்றின் மாதிரியை எடுத்து ஆய்விற்காக சென்னை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வகத்திற்கு ஓரிரு நாட்களில் அனுப்பப்படும். இதுபோன்று காலாவதியான கடலைகள் மூலம் தயாரிக்கப்படும் எண்ணெயை பொதுமக்கள் பயன்படுத்தினால் உடல் பாதிப்பு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் உள்ள எண்ணெய் உற்பத்தி செய்யும் ஆலைகளில் தொடர்ந்து நடைபெறும்” என்றுத் தெரிவித்தார்.