தேர்தலை புறக்கணித்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் – திருப்பரங்குன்றத்தில் வேட்பாளர்கள் அதிர்ச்சி

 
Published : Nov 19, 2016, 11:05 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
தேர்தலை புறக்கணித்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் – திருப்பரங்குன்றத்தில் வேட்பாளர்கள் அதிர்ச்சி

சுருக்கம்

திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தலை ஜல்லிக்கட்டு அர்வலர்கள்,புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், வேட்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடந்து வருகிறது. இதில் திமுக, அதிமுக, தேமுதிக உள்பட பல கட்சியினர் போட்டியிடுகின்றனர்.

இன்று காலை முதல் அனைத்து தொகுதிகளிலும், வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து வருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து செல்கின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்ததை கண்டித்து, திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தேர்தலை புறக்கணிகத்துள்ளனர். பூத் சிலிப்புகளை கிழித்து  வாக்குச்சாவடி முன்50க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதை கண்ட அனைத்து கட்சி வேட்பாளர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!