கோயம்பேடு பேருந்து முனையம்.. அங்கே லுலு மால் வரப்போகிறதா? தீயாய் பரவும் தகவல் - தமிழக அரசு கொடுத்த விளக்கம்!

By Ansgar R  |  First Published Jan 29, 2024, 9:10 PM IST

Koyembedu Bus Stand : அண்மையில் சென்னை கோயம்பதில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளில் பெருவாரியான பேருந்துகள் இனி கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 


திருச்சி, மதுரை மார்க்கமாக பயணிக்கும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள் கடந்த பொங்கல் அன்று முதல் சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமலல்லாமல் கோயம்பேட்டில் இருந்து புறப்பட்ட பல்வேறு வழி பேருந்துகள் பொங்கல் முதல் கிளம்பாக்கம் பகுதியில் இருந்து தான் புறப்படுகிறது. 

சில மாதங்களுக்கு முன்பு கோயம்பேடு பேருந்து நிலையம் படிப்படியாக அதன் சேவைகளை குறைத்துக்கொள்ளும் என்கின்ற தகவலும் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து சில அரசியல் கட்சிகளும், இணையவழி செய்திகளும் வெளியிட்ட அறிவிப்பில், அரசு கோயம்பேட்டில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தை முழுவதுமாக காலி செய்துவிட்டு, அந்த இடத்தில் லுலு மால் கட்ட அனுமதி வழங்கப் போவதாக தகவல் வெளியானது. 

Latest Videos

சென்னையில் ஆட்டோ கட்டணத்தை மறுசீரமைக்க பரிசீலனை.!போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட முக்கிய தகவல்

குறிப்பாக கடந்த சில வாரங்களாக இந்த செய்தி தீயாக பரவி வருகிறது, இந்நிலையில் அதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக அரசு தனது உண்மை சரிபார்ப்பு குழுவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளது. அதில் அடிப்படை ஆதாரம் எதுமற்ற இந்த பொய் தகவலை உண்மை என்று நம்பி அரசியல் கட்சியினர் சிலரும் தனி நபர்களும் சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகளை பரப்பிய வருகின்றனர். 

இது குறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு வீட்டு வசதி துணை செயலாளர் திரு. சமயமூர்த்தி அவர்கள் மேற்கண்ட தகவல் முற்றிலும் தவறானது அது சித்தரிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எந்தவிதமான மால்களும் வரப்போவதில்லை என்பது இதன் மூலம் தெரிகின்றது. ஆதாரமற்ற தகவல்களை உருவாக்குவதும், பரப்புவதும் குற்றச் செயலாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்த காதலன்; துக்கம் தாங்காமல் 11ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு - வேலூரில் பரபரப்பு

click me!