
நீலகிரி
நீலகிரியில் தொடர்ந்து நான்காவது நாளாக பெய்துவரும் பரவலான மழையால் பழங்காலக் கட்டடம் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் நால்வர் சிக்கினர். மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஆங்கிலேயர் கால கட்டடம் ஒன்றில் பல்பொருள்அங்காடி, தேநீர்க் கடை, பெட்டிக்கடை, வழக்குரைஞர் அலுவலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வழக்குரைஞர் அலுவலகத்தின் கீழ்ப்புறப் பகுதி திடீரென காலை இடிந்து விழுந்தது. கீழ்ப்புறத்தில் செயல்பட்டு வந்த தேநீர்க் கடையில் வேலை செய்து வரும் சிவா (36), மஞ்சு (26), சுரேஷ் (25) ஆகியோருடன் தேநீர் அருந்துவதற்காக வந்திருந்த தபால் துறை ஊழியர் சிவகுமார் (45) என்பவரும் சிக்கிக் கொண்டனர்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர்உடனடியாக விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கிய நால்வரையும் மீட்டு உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவும் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை பார்வையிட்டதுடன், உதகை அரசு தலைமை மருத்துவமனைக்குச் சென்று காயமுற்றவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இந்தக் கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்யவும், பழுதடைந்த கட்டடமாக இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதை அங்கிருந்து அகற்றவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உதகை நகரைப் பொருத்தமட்டில் பகலில் மழையும், மாலையில் கடும் குளிரும் நிலவுவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
நீலகிரியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழக்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பெரும்பாலான பசூதிகளில் மழை, புயலால் பரிந்துரைக்கபட்டிருந்தும் எத்தகைய பாதிப்புகளும் ஏற்படாத நிலையில், மழையின் காôணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பரவலாக பாதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இன்று காலை வரை பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்துள்ள மழையின் அளவு
குன்னூர் - 33 மில்லி மீட்டர், கூடலூர் - 29 மில்லி மீட்டர், குந்தா - 15.2 மில்லி மீட்டர், எமரால்ட் - 5 மில்லி மீட்டர், உதகை - 6 மில்லி மீட்டர், தேவாலா, கிண்ணக்கொரையில் - 20 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.