தமிழக தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகள் அங்கீகாரம் நீட்டிப்பு… அரசாணை வெளியிட்டது தமிழக அரசு!!

By Narendran SFirst Published Nov 18, 2021, 12:37 PM IST
Highlights

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகள் அங்கீகாரம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் உரிய நடவடிக்கை எடுத்து ஆவணங்கள் சமர்ப்பிக்கவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகள் அங்கீகாரம் நீட்டிப்பு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் உரிய நடவடிக்கை எடுத்து ஆவணங்கள் சமர்ப்பிக்கவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தனியார் பள்ளிகள் அரசு அங்கீகாரம் வழங்க முடியாத நிலையில் பல்வேறு தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதற்கான உரிய நடவடிக்கை எடுத்து ஆவணங்கள் சமர்ப்பிக்க மேலும் 3 ஆண்டுகள் அங்கீகாரம் நீட்டித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இருக்கும் பல்வேறு தனியார் பள்ளிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அவ்வாறு ஒரு தனியார் பள்ளி அரசிடம் அங்கீகாரம் பெறுவதற்கு அரசின் விதிகளை பூர்த்தி செய்யும் வகையில் பள்ளி அமைந்திருக்க வேண்டும் என்பது விதி. அவ்வாறு ஏற்கனவே வெளியிடப்பட்ட விதிகளில் மாணவர்களின் நலன் கருதி அரசு பல்வேறு புதிய விதிகளை இணைத்து மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, பள்ளி வளாகம் குறிப்பிட்ட பரப்பளவில் அமைந்திருக்க வேண்டும், அதற்கான சான்று, கட்டிட சான்று மற்றும் தடையில்லா சான்று உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்தால் அரசு அதனை பரிசீலித்து அங்கீகாரம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் தற்போது பல்வேறு தனியார் சரியான இடவசதி, கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் என அரசால் கொண்டு வரப்பட்ட புதிய விதிமுறைகள் பூர்த்தி செய்யாமல் உள்ளன. அதனை குறிப்பிட்ட தனியார் பள்ளிகள் சரிசெய்து ஆவணங்களை சமர்ப்பிக்க அரசு பல ஆண்டுகளாக வாய்ப்பு அளித்து வருகிறது. ஆனால் தனியார் பள்ளிகள் அதற்கு தகுந்த இடவசதி கிடைக்காததால் அரசின் விதிமுறைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் திண்டாடி வருகிறது. அவர்கள் உரிய விதிகளை பூர்த்தி செய்யாததால் அரசு அந்த தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை அரசு ரத்து செய்ய முடியும். இத்தகைய நிலையில் அந்த குறிப்பிட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி அரசு அங்கீகாரம் வழங்கவும் முடியாமல், ரத்து செய்யவும் முடியாமல் தடுமாறி வருகிறது. இதனிடையே தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அங்கீகாரத்தை எதிர்த்தும், பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும், தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.

1994 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, 1994 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த வேண்டும், தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக 6 வாரங்களில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனர் முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு நீதிபதிகள் கடந்த மாதம் வழக்குகளை முடித்து வைத்தார். இந்த நிலையில் தனியார் பள்ளிகளுக்கு 3 ஆண்டுகள் அங்கீகாரம் நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது தனியார் பள்ளிகளுக்கு மீண்டும் 3 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால இடைவெளிக்குள் கட்டிட சான்று, தடையில்லா சான்று, நிரந்தர உள்கட்டமைப்பு சான்று உள்ளிட்ட ஆவணங்களை தனியார் பள்ளிகள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு சான்றுகளை சமர்பிக்க தவறினால் அங்கீகாரம் ரத்தாகும் எனவும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  

click me!