தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் – ஆட்சியர்…

First Published Dec 6, 2016, 11:25 AM IST
Highlights


அரியலூர்,

அரியலூரில், தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று ஆட்சியர் சரவணவேல்ராஜ் அறிவுறுத்தினார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சரவணவேல்ராஜ் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 227 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் அளித்தனர்.

பொதுமக்களிடம் மனுக் களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மங்கலம், துணை ஆட்சியர் (நிலம்) சீனிவாசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

click me!