தென்மேற்கு பருவ மழை தொடங்கவுள்ளதால் எல்லாரும் உஷாராக இருக்க வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை...

Asianet News Tamil  
Published : May 28, 2018, 10:25 AM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
தென்மேற்கு பருவ மழை தொடங்கவுள்ளதால் எல்லாரும் உஷாராக இருக்க வேண்டும் - மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை...

சுருக்கம்

Everybody should be alert because southwest monsoon starts - District Revenue Officer advised ...

புதுக்கோட்டை

தென்மேற்கு பருவ மழை தொடங்கவுள்ளதால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அலுவலர்கள் எவ்வாறு செயல்படவேண்டும் என்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராமசாமி தலைமை வகித்தார். அப்போது அவர், "பருவமழை காலத்தில், வருவாய், காவல்துறையினர் தகவல் பரிமாற்றத்தை உடனுக்குடன் செய்திட தொழில்நுட்பக் கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். 

கடலோரப் பகுதிகளிலுள்ள காவல் நிலையங்களில் பணிபுரிவோர் தயார் நிலையில் இருப்பதோடு, கடலுக்குச் செல்லும் மீனவர்களின் விவரங்களை மீன்வளத் துறையினரிடமிருந்து பெற்று அத்துறையினருடன் இணைந்து தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.

தீயணைப்பு, மீட்புப் பணித்துறையினர் தங்கள் வசமுள்ள மிதவைப் படகுகள், உயிர்காக்கும் சாதனங்கள், இதர மீட்பு உபகரணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். 

மேலும், மாவட்டத்தின் அனைத்து வட்டங்களில் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் தேவையான வெள்ள முன்னெச்சரிக்கை தொடர்பான ஒத்திகைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்கள், பொதுக் கட்டங்களில் ஏற்பட்டுள்ள சிறு பழுதுகளை பொதுப்பணித்துறையினர் உடனடியாக சரிசெய்வதோடு, பருவமழைக் காலத்தில் ஏற்படும் அவசர நிலையை சமாளிக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் சாலையை சரிசெய்ய தேவையான இயந்திரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும். 

மேலும், சாலையில் சாய்ந்து விழக்கூடிய மரங்கள், மின்கம்பங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்திட தயார் நிலையில் இருத்தல் வேண்டும். 

மீன்வளத் துறையினர் அவசரகாலங்களில் பயன்படுத்தும் வகையில் கட்டுமரம், படகுகள், நீந்துபவர்கள் பற்றிய விவரங்களை பெற்றிருக்க வேண்டும்.

வானிலை ஆராய்ச்சி மையத்தினால் அவ்வப்போது தெரிவிக்கப்படும் வானிலை தொடர்பான எச்சரிக்கையை மீனவர்களுக்கு தெரியபடுத்தி, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

களப்பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர்கள் சேதம் குறித்த தகவல்களை ஆட்சியர் அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 1077 என்ற அவசர கட்டுப்பாட்டு மைய எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்" என்று கூறினார். 

இந்தக் கூட்டத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செந்தாமரை, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் பஞ்சவர்ணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

PREV
click me!

Recommended Stories

ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறேன்.. கூட்டணி முடிவாகும் முன்பே தொகுதியை உறுதி செய்த டிடிவி
திமுக அரசின் நலத்திட்டங்களால் பயன்பெறாத ஒரு குடும்பம் கூட தமிழகத்தில் இல்லை.. மார்தட்டும் முதல்வர் ஸ்டாலின்