ஏறுதழுவுதலை நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…

Asianet News Tamil  
Published : Dec 19, 2016, 11:54 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
ஏறுதழுவுதலை நடத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்…

சுருக்கம்

சிங்கம்புணரியில் ஏறுதழுவுதலை நடத்தக் கோரி தமிழர் தேசிய முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் கர்ணன் தலைமை வகித்தார். சரவணன், சந்திரமோகன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

மேலும், ஆர்ப்பாட்டத்தில் மதிவாணன், மாவட்ட செயலாளர் பிரிட்டோ, மாவட்ட தலைவர் அருணா சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஒன்றிய செயலாளர் அன்புச்செழியன் வரவேற்று பேசினார். சிங்கம்புணரி நகர ஒருங்கிணைப்பாளர் ஃபாரூக் முகமது அலி நன்றி கூறினார்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக.. திமுக புரிஞ்சுக்கோங்க மரியாதை மற்றும் சீட்டுகளை யார் தருகிறார்களோ அவர்களோடு தான் கூட்டணி
3வது வரிசையில் தள்ளப்பட்ட ராகுல் காந்தி... கொதித்தெழுந்த காங்கிரஸ்.. இதுதான் ஜனநாயகமா?