Amoeba : மூளையை உண்ணும் அமீபா.!! 3 சிறுவர்கள் அடுத்தடுத்து பலி.. தமிழக அரசை அலர்ட் செய்யும் எடப்பாடி பழனிசாமி

By Ajmal Khan  |  First Published Jul 7, 2024, 2:21 PM IST

ஏரி, குளங்களில் குளித்த சிறுவர்களை தாக்கிய அமீபா நுண்ணுயிரி மூளையை உண்டு 3 பேரை பலியாக்கியுள்ளது. இந்த நுண்ணுயிரி தமிழகத்தில் பரவாமல் தடுத்த நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 


அமீபா தாக்குதல்- 3 பேர் பலி

கேரளாவில் கடந்த மாதங்களில் மூளையைத் தின்னும் அமீபா நுண்ணியிரி பரவி வருகிறது. இதனால் ஏரி, குளங்களில் குளித்த நிலையில், தலைவலி, வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழ்ந்தனர்.  கோழிக்கோட்டைச் சேர்ந்த 7 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மிருதுல், கண்ணூரை சேர்ந்த 13 வயதான தாக்‌ஷினா, லப்புரத்தைச் சேர்ந்த 5 வயதான ஃபட்வா ஆகிய 3 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

மூளையை தின்னும் அமீபா மூளை திசுக்களை அழித்து மூளை வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த பாதிப்பு ஏற்பட்ட  100 சதவிகித நபர்களில்  97 சதவிகிதம் பேர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக  அமெரிக்காவின் நோய்க் கட்டுப்படு தடுப்பிக்கான மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இந்த அமீபி நுண்ணியிரி பரவவலை தடுக்க தமிழக அரசு சார்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எச்சரிக்கை விடுக்கும் எடப்பாடி

இது தொடர்பாக தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளா மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மூவர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். கேரளாவில் இந்த நுண்ணுயிர் பரவி வரும் நிலையில்,

தமிழ்நாட்டில் இத்தகு பரவல்கள் ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும். அசுத்தமான நீரின் வாயிலாகவே பரவும் இந்த நுண்ணுயிர், குழந்தைகளை தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளதால், மக்களின் உயிர்களைக் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனத்தை  செலுத்துமாறு இந்த திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

click me!