ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்.! வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம்- ஈபிஎஸ்

Published : Feb 19, 2025, 04:35 PM ISTUpdated : Feb 19, 2025, 04:39 PM IST
ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்.! வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம்- ஈபிஎஸ்

சுருக்கம்

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்ததாகவும், ஸ்டாலின் அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் பாலியல் குற்ற சம்பவங்கள்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. எனவே தமிழக அரசின் சட்ட ஒழுங்கை விமர்சித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கோவையில் சிறுமி ஒருவர் கல்லூரி மாணவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இன்று திருப்பூரில் வட மாநில பெண் வட மாநில இளைஞர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 
12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக செய்திகள் வருகின்றன.  இது ஆட்சியின் பங்காளர்கள் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய தருணம். 

தமிழக வரலாற்றில் கருப்பு நாள்

சங்க காலம் முதலே பெண் இனத்தை போற்றிப் பாதுகாத்து வந்த தமிழக வரலாற்றில், இது போன்ற கருப்பு நாட்கள் தொடர்கதையாவது மிகவும் வருத்தத்திற்கும் , கண்டனத்திற்கும் உரியதாகும் . 
பயங்கரவாதிகள் ஆட்சி நடக்கும் நாடுகளில் கூட இத்தகைய கொடூரம் நடந்ததில்லை என எண்ணும் அளவு இந்த ஸ்டாலின் மாடல் ஆட்சி நடந்து வருகிறது. 

இந்த அரசு பெண்களுக்கு எதிரான 
பாலியல் குற்றச்சம்பவங்களை உரிய முறையில் தடுக்காமல் , 
பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தவறியதால் ,
இத்தகைய கொடூரங்கள் தினந்தோறும் நிகழ்கின்றன. 

பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலை

இந்த ஆட்சியில் தமிழ்நாடு இப்படி சிக்கிச் சீரழிந்து வருவது குறித்து எந்தக் கவலையுமில்லாத ஸ்டாலின், 
‘பெண்களுக்கு பாதுகாப்பு’ என வாய்சவடால் மட்டும் பேசினால் போதுமா? திமுக ஆட்சி நீடித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு அச்சுறுத்தலான நிலைதான் தொடர்கிறது,

இனியாவது அரசு விழித்து கொண்டு , பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முக்தாரை உடனடியா கைது செய்யுங்க.. தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்.. அரசுக்கு சரத்குமார் எச்சரிக்கை
எடப்பாடிக்கு வேட்டு வைத்த செங்ஸ்..! விஜய் தான் முதலமைச்சர் என சபதம்