Latest Videos

சிறுவன் பலி... குடிநீரை கூட இந்த அரசால் சுகாதாரமாக வழங்க முடியவில்லையே.! புரையோடிய நிர்வாகம் -விளாசும் இபிஎஸ்

By Ajmal KhanFirst Published Jun 30, 2024, 7:31 AM IST
Highlights

அடிப்படை தேவையான குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதைக் கூட ஒரு அரசாலும் மாநகராட்சி நிர்வாகத்தாலும் உறுதிசெய்யமுடியவில்லை என்பது , நிர்வாகச் சீர்கேடு அரசு இயந்திரம் முழுவதும் புரையோடிப் போயுள்ளதைக் காட்டுகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 
 

கழிவு நீர் அருந்திய சிறுவன் பலி

கழிவு நீர் அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த சிறுவனின் வீட்டில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்தநிலையில் சிறுவன் மரணம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்திய 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கனவே தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் சுகாதாரமற்றக் குடிநீரால் 10 பேர் பலியானதாக செய்திகள் வந்துள்ள நிலையில், தலைநகர் சென்னையிலும் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சென்னை மாநகராட்சியில் குடிநீர் விநியோகம் சுகாதாரமற்று இருப்பதாக தொடர்ந்து பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்தும்,

Vegetables Price : சர சரவென குறைய தொடங்கிய தக்காளி விலை.! ஒரு கிலோ பீன்ஸ், கேரட், முருங்கைக்காய் விலை என்ன.?

நிர்வாக சீர்கேடு- இபிஎஸ் விமர்சனம்

எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு அலட்சியப்போக்குடன் இருந்த விடியா திமுக அரசின் குடிநீர் வழங்கல் துறைக்கும், சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கும், சென்னை மெட்ரோ குடிநீர் வாரியத்திற்கும் எனது கடும் கண்டனம். மக்கள் வாழ்வியலுக்கு மிக அடிப்படை தேவையான குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதைக் கூட ஒரு அரசாலும் மாநகராட்சி நிர்வாகத்தாலும் உறுதிசெய்யமுடியவில்லை என்பது ,

நிர்வாகச் சீர்கேடு அரசு இயந்திரம் முழுவதும் புரையோடிப் போயுள்ளதைக் காட்டுகிறது.  தமிழ்நாடு முழுவதும், குறிப்பாக சென்னையில், குடிநீர் சுகாதாரமான முறையில் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு விடியா திமுக அரசையும், அதன் சென்னை மாநகராட்சி நிர்வாகத்தையும் வலியுறுத்துகிறேன்.

Annamalai : ஏழை எளிய மக்களின் உயிர் என்றால் திமுகவுக்கு அத்தனை இளக்காரமாகி விட்டதா? சீறும் அண்ணாமலை

click me!