ஒரே நிறுவனம் அல்லது ஒரே நபருக்கு 10 ஆண்டு காலமாக சரக்கு போக்குவரத்து குத்தகை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருசில ஏலதாரர்களே எல்லா குத்தகைகளிலும் மீண்டும் மீண்டும் பங்குபெற்றதையும் அறிய முடிகிறது இந்திய தணிக்கை தலைவர் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சிஏஜி அறிக்கை தாக்கல்
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்றோடு நிறைவடைந்தது. அப்போது தமிழக அரசின் செயல்பாடுகள் தொடர்பாக இந்திய தணிக்கை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மாநில விற்பனை கழகம் (டாஸ்மாக்) செயல்பாடுகளை ஆய்வுசெய்தபோது உற்பத்தியாளர்களிடமிருந்து மதுபானங்களை கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மை இல்லாதது கண்டறியப்பட்டது. வெளிப்படைதன்மை இல்லாததால் ஒருசில உற்பத்தியாளர்கள் அதிகம் பயனடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு கொள்முதல் ஆணை குறைந்து அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சரக்கு போக்குவரத்து ஏல ஆவணங்களை சோதனை செய்ததில் பல்வேறு ஒழுங்கீனங்கள் நடந்திருப்பது தெரிய வந்தன.
Annamalai : ஏழை எளிய மக்களின் உயிர் என்றால் திமுகவுக்கு அத்தனை இளக்காரமாகி விட்டதா? சீறும் அண்ணாமலை
ஏலமுறை வெளிப்படையாக இல்லை
தமிழக அரசு மின்னணு ஏல விண்ணப்ப முறையை 1.1.2008 அன்று அறிமுகப்படுத்தியது. ஏலமுறை வெளிப்படையாகவும், போட்டி நிறைந்ததாகவும் அமையவே மின்னணு ஏலமுறையை டாஸ்மாக் திட்டமிட்டது. ஆனால் ஆவணங்களை பரிசோதனை செய்ததால், அதே நிறுவனங்கள் ஏலத்தில் மீண்டும் மீண்டும் பங்கேற்றது கண்டறியப்பட்டது. ஒரே நிறுவனம் அல்லது ஒரே நபருக்கு 10 ஆண்டு காலமாக சரக்கு போக்குவரத்து குத்தகை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒருசில ஏலதாரர்களே எல்லா குத்தகைகளிலும் மீண்டும் மீண்டும் பங்குபெற்றதையும் அறிய முடிகிறது. எனவே ஏலமுறை வெளிப்படையாக இல்லாமல் இருந்ததுடன் போட்டியை ஊக்குவிப்பதாகவம் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் மீதான புகார்களில் அதிகமான புகார்கள் கடைகளில் அதிகபட்ச விலையை விட கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது
மின் கொள்முதல் இணையதள சேவை
இதே போல முறையான கண்காணிப்பு இல்லாததால் மின் கொள்முதல் இணையதளம் குறைவாகவே பயன்படுத்தப்பட்டதாக மத்திய தணிக்கை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில், மாநிலத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் மின் கொள்முதல் இணையதளத்தின் மூலம் மட்டுமே பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதை கட்டாயமாக்க தமிழக அரசு தவறிவிட்டது. திட்டம் அமலுக்கு வந்து 15 ஆண்டுகளானபோதும் இந்த மென்பொருளின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் பொறுப்பு மையம் இல்லை. இதன் விளைவாக மின் கொள்முதல் இணையதளம் குறைவாகவே பயன்படுத்தப்பட்டது என சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.