EPS vs MODI : வாக்கு வங்கி அரசியலுக்காக இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவதா.!! மோடிக்கு எதிராக சீறும் எடப்பாடி

Published : Apr 23, 2024, 12:45 PM IST
EPS vs MODI : வாக்கு வங்கி அரசியலுக்காக இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவதா.!! மோடிக்கு எதிராக சீறும் எடப்பாடி

சுருக்கம்

தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   

மோடியின் சர்ச்சை பேச்சு

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி,  நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இஸ்லாமியர்கள் அதிக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால் இந்துக்களின் சொத்துக்கள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமிய பெண்களுக்கு கொடுக்க காங்கிரஸ் நினைக்கிறது என பேசியிருந்தார். இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் ஆணையத்திலும் புகார் தெரிவித்தனர். 

தோல்வி பயத்தால் மத உணர்வை தூண்டிவிடும் மோடி.. வெறுப்பு பேச்சை காதில் வாங்காத தேர்தல் ஆணையம்- விளாசும் ஸ்டாலின்

வாக்கு வங்கி அரசியல்

இந்த நிலையில்,  அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் கட்சித் தலைவர்கள் மத துவேச கருத்துகளை தேர்தலுக்காக பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். பாரதப் பிரதமர் திரு. நரேந்திரமோடி அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பாரதப் பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

சிறுபான்மையின மக்களுக்கு அச்சம்

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும்,

மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Thiruma : நேர்மையான தேர்தல் நடக்க வேண்டும் என்றால் மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கனும்- திருமாவளவன்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சக மாணவர்களால் அடித்து கொ**ல்லப்பட்ட +2 மாணவன்.. சமுதாயம் எங்கே போகிறது..? அன்புமணி அதிர்ச்சி
எல்லாரும் அதிமுககாரன் கிடையாது... கட்சியில் இருப்பேன்டானு சொல்றவன்தான் ரோஷமானவன்..! செங்கோட்டையன் மீது செல்லூர் ராஜூ ஆவேசம்..!