
Modi's leadership from CM to PM : இந்தியாவின் பிரதமர் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி கடந்த 25 ஆண்டுகாலமாக முதல்வர் முதல் பிரதமர் வரை தொடர்ந்து தலைமை பணியில்இருந்துள்ளார். மோடி தனது அரசியல் பயணத்தை ஆர்எஸ்எஸ் தொடங்கினார். ஆர்எஸ்எஸின் முழுநேர பிரச்சாரகராக பணியாற்றினார். இதனையடுத்து குஜராத்தில் பாஜகவில் இண்ணைந்த அவர், பல்வேறு பொறுப்புகளை வகித்தார். 1987 அகமதாபாத் மாநகர சபைத் தேர்தலில் பாஜக வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தார். இதனையடுத்து குஜராத் பாஜக அமைப்புச் செயலாளரானார் மோடி. 1990ஆம் ஆண்டில் பாஜகவின் தேசிய தேர்தல் கமிட்டி உறுப்பினரானார். எல்.கே. அத்வானியின் ராம் ரத யாத்திரை மற்றும் முரளி மனோஹர் ஜோஷியின் ஏக்தா யாத்திரையையும் மோடி ஏற்பாடு செய்தார்.
1995ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதையடுத்து குஜராத் பாஜக தலைவரானார் மோடி, இதனையடுத்து 2001 ஆம் ஆண்டு கேசூபாய் படேல் முதலமைசர் பதவியை ராஜினாமா செய்த பின் குஜராத் முதலமைச்சரானார் மோடி, தொடர்ந்து அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய மோடி நாட்டையே குஜராத் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து 3 முறை முதலமைச்சராக பதவி வகித்தார். இதனையடுத்து தேசிய அரசியலுக்கு மோடியை பாஜக அழைத்தது. இதன் பேரில் கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி களத்தில் இறங்கினார். அப்போது நாடு முழுவதும் அடித்த மோடி அலையில் காங்கிரஸ் கட்சி காணாமல் போனது.
பல இடங்களில் அபார வெற்றி பெற்ற பாஜக இந்தியாவை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று பிரதமாக நீடித்து வருகிறார். அந்த வகையில் முதலமைச்சர், பிரதமர் என தொடர்ந்து 25 வருடம் தலைமை பதவியை அலங்கரித்து வருகிறார். இதனையடுத்து பிரதர் மோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
25 ஆண்டுகளாக அரசியலமைப்புச் சட்டத் தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வரலாற்றுச் சாதனை படைத்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது. இந்த இணையற்ற மைல்கல், உங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம், அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும், நேர்மையுடன் தேசத்திற்கு சேவை செய்வதற்கும் உள்ள உறுதியான அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது என தெரிவித்துள்ளார்.