சுங்கச்சாவடிகளில் 5 முதல் 150 ரூபாய் வரை கட்டணம் உயர்கிறது.! எந்த எந்த டோல்கேட் தெரியுமா.? வெளியான பட்டியல்

By Ajmal Khan  |  First Published Aug 30, 2023, 1:26 PM IST

தமிழகத்தில் விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி, சமயபுரம் உள்ளிட்ட 28 சுங்கச்சாவடிகளில் குறைந்தது ரூ.5 முதல் அதிகபட்சமாக  ரூ.150 நுழைவு கட்டணம்  உயர்த்தப்படவுள்ளது. செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.


சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு

தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 55 சுங்கச்சாவடிகள் உள்ளது. இதில் கடந்த ஏப்ரல் மாதம் 27 சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனையடுத்து மீதமுள்ள இடங்களான விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி, சமயபுரம் உள்ளிட்ட 28 இடங்களில் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுகிறது. குறைந்தது ரூ.5 முதல் அதிகபட்சமாக  ரூ.150 உயர்த்தப்படவுள்ளது. இதற்கு பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்னர். ஏற்கனவே விலைவாசி உச்சத்தில் உள்ள நிலையில், லோட்கேட் கட்டணம் அதிகரித்தால் விலை வாசி மீண்டும் அதிகரிக்க கூடும் என் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

விலைவாசி அதிகரிக்க வாய்ப்பு

இந்தநிலையில் இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்கக்கட்டணத்தை உயர்த்துவது எந்த வகையிலும் நியாயமற்றது. தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த பராமரிப்புப் பணிகளும்  மேற்கொள்ளப்படாத நிலையில், சுங்கக்கட்டணத்தை மட்டும் ஆண்டுக்கு ஆண்டு உயர்த்துவது கண்டிக்கத்தக்கது. சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிப்பதில் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை.

சென்னையை அடுத்த செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் விதிகளுக்கு முரணாக ரூ.28 கோடி  கூடுதல் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டிருப்பது இந்திய தலைமைக் கணக்காயரின் தணிக்கை அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.  அதுமட்டுமின்றி, கடந்த ஐந்தாண்டுகளில் அந்த சுங்கச்சாவடியில் 2019 ஆகஸ்ட் முதல் 2020 ஜுன் வரை பயணித்த 1.17 கோடி ஊர்திகளில் 53% அதாவது 62.37 லட்சம் ஊர்திகள் மிக முக்கியமானவர்களின் ஊர்திகள் என்று அறியப்பட்டு அவற்றுக்கு கட்டண விலக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

சுங்க கட்டண உயர்வு கை விட வேண்டும்

ஒருபுறம் இதுபோன்ற தவறுகளும், முறைகேடுகளும் தொடர்வதை அனுமதித்து விட்டு, மறுபுறம் சுங்கக்கட்டணத்தை தொடர்ந்து உயர்த்துவது நியாயமற்றது. அனைத்து சுங்கச்சாவடிகளிலும் இதுவரை ஈட்டப்பட்டுள்ள வருவாய் குறித்து தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதில் தெரியவரும் முடிவுகளின் அடிப்படையில் தான் எந்தெந்த சுங்கச்சாவடிகளை தொடர வேண்டும்,  

எவற்றை மூட வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும். அத்தகைய தணிக்கை செய்து முடிக்கப்படும் வரை அனைத்து சுங்கச்சாவடிகளிலும் சுங்கக்கட்டணம்  வசூலிப்பதை நிறுத்தி வைக்க வேண்டும். வரும் செப்டம்பர்  ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள  சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

புழலில் இருந்து வெளியே வருவதில் செந்தில் பாலாஜிக்கு சிக்கல்.! ஜாமீன் மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி

click me!