சென்னையில் முன்னாள்,இன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனையா..? 47 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையால் பரபரப்பு

By Ajmal KhanFirst Published Aug 5, 2022, 12:09 PM IST
Highlights

 
 சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரின் எதிரொலியாக சென்னை நுங்கம்பாகத்தில் உள்ள பைனான்சியர் ரமேஷ் டக்கர் வீடு மற்றும் எழும்பூரில் உள்ள அவரது பைனான்ஸ் அலுவலகம் உள்பட சென்னையில் பல்வேறு இடங்கள் ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் என 10க்கும் மேற்பட்ட  இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்

அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

அரசியல் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக பணபரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில்  நாடு முழுவதும் அமலாக்கத்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில் சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்டர்நேஷனல் பைனான்ஸ் சர்விஸ் {IFS}என்ற கம்பெனி தொடர்பாக தமிழகம் முழுவதும் 21 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.  ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் மாதம் 8ஆயிரம் ரூபாய் தருவதாக கூறி பல பேரிடம் முதலீடு பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது இதன்  தொடர்பாகவும் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொகுசு காரை வாங்கி சர்ச்சையில் சிக்கிய நேரு! விலை இத்தனை கோடியா? இந்த காரை யாரெல்லாம் வச்சிருக்காங்க தெரியுமா?

பைனான்சியர் வீட்டில் சோதனை 

வேலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பேரிடம் பணத்தை வசூல் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களாக லட்சுமி நாராயணன் மற்றும் வேத நாராயணன் சகோதரர்கள் உள்ளனர். மேலும் கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பைனான்சியர்கள் வீடுகளில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.  சென்னை நுங்கம்பாக்கம் மோகன் குமாரமங்கலம் தெருவில் உள்ள கார் பைனான்சியர் ரமேஷ் டக்கார் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவரது அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், எழும்பூரில் உள்ள பைனான்ஸ் அலுவலகம் உட்பட சென்னையில் சில இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அன்புச்செழியனுக்கு சொந்தமான மதுரை வீட்டில் சோதனை நிறைவு… கைப்பற்றப்பட்ட ரொக்கம் வங்கியில் ஒப்படைப்பு!!

முன்னாள் அமைச்சர் வீட்டில் சோதனையா?

இதற்கிடையே பட்டினப்பாக்கத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவரின் வீட்டில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியானது இதனையடுத்து அவர் வீடு முன்பாக ஏராளமான பத்திரிக்கையாளர்கள் குவிந்தனர். ஆனால் அங்கு சோதனை எதுவும் நடைபெறவில்லை என்ற தகவல் கிடைத்ததையடுத்து பத்திரிக்கையாளர்கள் திரும்பி சென்றனர். இதே போல  தற்போது அமைச்சராக இருக்கும் ஒருவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறப்பட்டது ஆனால் இந்த தகவலை அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது வரை உறுதிப்படுத்தவில்லை.

இதையும் படியுங்கள்

மோடியின் கோரிக்கையை ஏற்ற எடப்பாடி பழனிசாமி...! அதிமுக தொண்டர்களுக்கு திடீர் உத்தரவிட்ட இபிஎஸ்

click me!