சிவன் பெருமானை அவதூறாக பேசியவர் மீது நடவடிக்கை இல்லை.! கனல் கண்ணன் மீது நடவடிக்கையா?திமுக அரசு மீது சீறிய பாஜக

By Ajmal KhanFirst Published Aug 5, 2022, 11:28 AM IST
Highlights

ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு முன் உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என பேசிய சினிமா சண்டைபயிற்ச்சியாளர் கனல் கண்ணனை கைது செய்ய போலீசார் வழக்கு பதிவு செய்ததற்கு தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி  கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 

பெரியார் சிலையை உடைக்க வேண்டும்

 மதுரவாயலில் கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் பேசிய கனல் கண்ணன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான பேர் தரிசனம் செய்கின்றனர். அப்படி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது எதிரே கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது. அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்று தான் இந்துக்களின் எழுச்சி என தெரிவித்து இருந்தார். இவரது பேச்சுக்கு பல்வேறு அமைப்பின் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்தநிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

குடியரசு தலைவர் விருது வேண்டுமா..? ரூ.2லட்சம் தந்தால் விருது...கோவையில் மோசடி மன்னன் கைது..சிக்கியது எப்படி.?

கனல் கண்ணன் மீது புகார்

அந்த புகாரில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், திரைப்பட சண்டை பயிற்ச்சியாளருமான கனல் கண்ணன் இரு மதத்தினரை மோதல் உண்டாக்கும் வகையில் பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2006 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கத்தில் உள்ள பெரியார் சிலையை சில சமூக விரோதிகள் சேதப்படுத்தியதால் கலவரம் உண்டானது. அந்த சம்பவம் முடிந்து சுமார் 15 ஆண்டுகள் ஆனநிலையில் தற்பொழுது மீண்டும் கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் கனல் கண்ணன் பேசியுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் கலவரத்தை தூண்டும் வகையில் சிலர் செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டிப்பட்டிருந்தது. இதனையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் கனல் கண்ணன் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து கனல் கண்ணனை கைது செய்ய போலீசார் சென்ற போது தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.

தமிழின எதிரிகளும்,மறைமுகமாக விலை போகும் கூலிகளும் என்னதான் கதறினாலும் கலைஞரின் புகழை மறைக்க முடியாது- ஸ்டாலின்

பாஜக கண்டனம்

இந்தநிலையில் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டு டுவிட்டர் பதிவில், சிவ பெருமானை அவதூறாக பேசி ஹிந்துக்களின்  நம்பிக்கைகளை புண்படுத்திய 'யூ டூ புரூட்டஸ்' மீது நடவடிக்கை எடுக்க தெம்பில்லாத, துணிவில்லாத  தமிழக  அரசு, கணல் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க துடிப்பது கண்டிக்கத்தக்கது. கருத்துரிமையை தட்டிப்பறிக்கும் ஃபாஸிச தி மு க அரசுக்கு கடும் கண்டனங்கள் என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

மோடியின் கோரிக்கையை ஏற்ற எடப்பாடி பழனிசாமி...! அதிமுக தொண்டர்களுக்கு திடீர் உத்தரவிட்ட இபிஎஸ்
 

click me!