
Enforcement Directorate seizes luxury hotel : சட்ட விரோத பணப்பரிமாற்ற மோசடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் அமலாக்கத்துறை தொடர்ந்து நாடு முழுவதும் சோதனை நடத்தி வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை அவ்வப்போது சிக்கி வருகிறார்கள். குறிப்பாக தமிழகத்தை குறி வைத்து அமலாக்கத்தை பல இடங்களில் சோதனை நடத்தியது. அந்த வகையில் அமைச்சர்களாக உள்ள செந்தில் பாலாஜி, பொன்முடி, துரைமுருகன், கேஎன் நேரு ஆகியோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
ராமேஸ்வரத்தில் அமலாக்கத்துறை சோதனை
இந்த நிலையில் . டி.எம்.டிரேடர்ஸ் மற்றும் கே.கே.டிரேடர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. இதில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் கண்டறியப்பட்டது. மேலும் பல ஆவணங்களும் சிக்கியது. இதனை தொடர்ந்து சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக விளங்கும் ராமேஸ்வரத்தில் செவன் ஹில்ஸ் என்ற பெயர் கொண்ட சொகுசு ரிசார்ட் அமைந்துள்ளது. இந்த சொகுசு விடுதியானது கொல்கத்தாவை சேர்ந்த தொழிலதிபர் உடையது என கூறப்படுகிறது. தற்போது சொகுசு விடுதியை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சொகுசு விடுதி முடக்கம்
இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறையின் கோல்கட்டா மண்டல அலுவலகம் ராமேஸ்வரத்தில் உள்ள செவன் ஹில்ஸ் பாம்பன் தீவு ரிசார்ட்டில் அமைந்துள்ள 60 அறைகள் மற்றும் காலியாக உள்ள நிலம் உட்பட ரூ.30 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை கையகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.