
தற்காப்பு என்ற பெயரில் பொய்யான மோதல் சாவுகளை நடத்தி வருகிறது தமிழக காவல்துறை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக ஆட்சியில் நடந்த 19 என்கவுண்டரில் 21 பேர் கொல்லப்பட்டதாகவும், கைது செய்த பின்பு குற்றவாளிகளை காவல்துறையினர் சுட்டுக்கொல்வது அதிகரிப்பதாகவும்" பல்வேறு அமைப்புகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் 75 பேர் கையெழுத்திட்டு கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
திமுக ஆட்சியில் அதிக என்கவுண்டர்
மார்ச் 25ம் தேதி சென்னையில் ஜாபர் குலாம் உசேன், 31ம் தேதி மதுரையில் சுபாஷ் சந்திரபோஸ், ஏப்ரல் 1ம் தேதி கடலூரில் 19 வயது முட்டை விஜய் என அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தற்காப்பு என்ற பெயரில் பொய்யான மோதல் சாவுகளை நடத்தி வருகிறது தமிழக காவல்துறை.
இதையும் படிங்க: அதிமுகவின் இறுதி யாத்திரை துவக்கம்! மாபெரும் தவறை செய்த இபிஎஸ்! கொதிக்கும் கே.சி.பழனிசாமி!
சட்டத்தைக் கையில் எடுக்கும் போலீஸ்
தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் மட்டும் இப்படிக் கைது செய்த பின்பு 6 பேரைச் சுட்டுப் பிடித்துள்ளனர். 3 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளனர். போலீசாரால் சுடப்பட்டவர்களுக்கு எதிராகப் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவாக பேசவில்லை இருந்தாலும், குற்றவாளிகளை முறையாக கைது செய்து, புலன் விசாரணை செய்து, நீதிமன்றத்தில் உரிய தண்டனை பெற்றுத் தந்து அவர்களை குற்ற செயல்பாட்டிருலிந்து தடுத்து நிறுத்துவதை வரவேற்கிறோம். ஆனால், போலீசார் தாமே சட்டத்தைக் கையில் எடுத்து தண்டிப்பதற்கு சட்டப்படி அதிகாரம் இல்லை.
மனித உரிமை மீறல்
கடந்த சில நாள்களில், 3 என்கவுண்டர்கள், 6 துப்பாக்கிச் சூடுகள், பலர் காவல் நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுந்த சம்பவங்கள் என சுதந்திர இந்திய வரலாற்றில் இல்லாத வன்முறையை, மனித உரிமை மீறலைத் தமிழ்நாட்டின் திமுக ஆட்சியின் கீழ் செயல்பட்டு வரும் காவல்துறை திட்டமிட்டு நடத்தி வருகிறது. சமூகத்தில் நடந்து வரும் குற்றங்களை, கொடுங்குற்றங்களில் ஈடுபட்டு வருபவர்களை செயல்பட விடாமல் தடுப்பதற்கும், எதிர் வன்முறை தீர்வாகாது. நீதிமன்றத்தால் வழங்கப்படும் மரண தண்டனையைப் பெரும்பாலான உலக நாடுகள் ஒழித்துவிட்ட நிலையில், விசாரணை அதிகாரம் மட்டுமே பெற்ற காவல்துறை, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திச் சட்ட விரோதமாக மனித உயிரைப் பறிப்பது குற்றமாகும் என தெரிவித்துள்ளார்.
( குறிப்பு: கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் என இருவர் மரணமடைந்த போது அதை பெரும் பேசும்பொருளாக்கி அரசியல் ஆதாயம் பெற்றது திமுக, ஆனால் இன்று அதை விட மோசமான பல சம்பவங்கள் நடந்தும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் இருந்து எந்த கேள்வியும் எழுப்பாதது திமுகவின் அராஜக போக்கிற்கு துணை நிற்பது போலவே உள்ளது. இனியாவது கண்விழிப்பாரா எதிர்க்கட்சித்தலைவர்?)