Ponmudi ED Raid : அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு.. அமலாக்கத்துறை அதிரடி சோதனை.. திமுகவினர் அதிர்ச்சி

Published : Jul 17, 2023, 08:00 AM ISTUpdated : Jul 17, 2023, 10:08 AM IST
Ponmudi ED Raid : அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு.. அமலாக்கத்துறை அதிரடி சோதனை.. திமுகவினர் அதிர்ச்சி

சுருக்கம்

தமிழக அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் அவரது தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது. இன்று காலை 7 மணி முதல் 5 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது என்றும், மத்திய போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஏழு பேர் கொண்ட அதிகாரி குழுவுடன் பாதுகாப்பு பணிக்காக, மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் பணியில் உள்ளனர் என்றும், இந்த சோதனை நடைபெறும் சென்னை இல்லத்தில் அமைச்சர் பொன்முடி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல், சென்னை, விழுப்புரம் மாவட்டங்களில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்பான 7 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

மேலும், கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினரும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான கௌதம் சிகாமணியின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில் ஆளும் கட்சியின் முக்கிய புள்ளியான அமைச்சர் பொன்முடி வீட்டில் ரெய்டு நடப்பது பெரும் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.

ராஜ்யசபா எம்.பி ஆகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை - இதை எதிர்பார்க்கவே இல்லையே !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!