முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் வைப்பது பற்றிப் பேசிய ஆ.ராசாவுக்கு பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
திமுகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினரான முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பொதுக்கூட்டம் ஒன்றில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் வைப்பது பற்றிப் பேசியுள்ளார். அந்தப் பேச்சில், கருணாநிதியின் பேனா இல்லாவிட்டால் அண்ணாமலை ஆடு மேய்க்கத்தான் போகவேண்டும் என்று கூறினார்.
இது மட்டுமின்றி கருணாநிதியின் பேனா இல்லாவிட்டால் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெல்லமண்டி நடத்திக்கொண்டிருப்பார் என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தென்னந்தோப்பில் உட்கார்ந்து கூடை முடைந்துகொண்டிருப்பார் என்றும் பேசியிருக்கிறார் ஆ.ராசா பேசினார்.
கண்டிக்காமல் திரும்பி வந்தால் கருப்புச் சட்டை போராட்டம்! மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை எச்சரிக்கை
ஆ.ராசாவின் இந்தப் பேச்சைக் கண்டித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் எழுதியுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
ஊழல் செய்து மக்கள் பணத்தைத் திருடியவர்கள் ஜம்பமாக வலம் வரும்போது, ஆடு மேய்ப்பது, வெல்லமண்டி வைத்திருப்பது, கூடை பின்னுவது போன்ற விவசாயம் சார்ந்த தொழில்கள், திரு ஆ.ராஜாவுக்குக் கேவலமான தொழில்களாகத்தான் தெரியும்.
ஊழல் செய்து மக்கள் பணத்தைத் திருடியவர்கள் ஜம்பமாக வலம் வரும்போது, ஆடு மேய்ப்பது, வெல்லமண்டி வைத்திருப்பது, கூடை பின்னுவது போன்ற விவசாயம் சார்ந்த தொழில்கள், திரு ஆ.ராஜாவுக்குக் கேவலமான தொழில்களாகத்தான் தெரியும்.
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற சொல்லாடல், கலைஞர்… pic.twitter.com/w6v5QGW8Q0
கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்ற சொல்லாடல், கலைஞர் கருணாநிதி அவர்கள் பிறக்கும் முன்னரே வழக்கத்தில் உள்ளது என்பதை 2G ராஜாவுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். கொங்கு பகுதிக்கு திமுக செய்தது என்னவென்றால், 1970ஆம் ஆண்டு கொங்கு பகுதியில் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்கக் கோரி போராடிய மூன்று விவசாயிகளைச் சுட்டுக் கொன்றதுதான்.
கடும் உழைப்புக்குப் பெயர் போன கொங்கு மக்களை அசிங்கப்படுத்துவதை ஆ.ராஜா நிறுத்திக் கொள்ள வேண்டும். யார் முன்னேற்றத்துக்காவது தனது கட்சித் தலைவர் பெயரில் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என ஆ.ராஜா விரும்பினால், சைக்கிளில் நீதிமன்றம் சென்ற அவர் உள்ளிட்ட திமுகவினர், இன்று பல ஆயிரம் கோடி சொத்துக்கு அதிபதியாக இருப்பதற்கு வேண்டுமானால் கருணாநிதி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளலாம்.
டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை பற்றி பதிவிட்ட 8 பேர் நேரில் ஆஜராக சம்மன்!