என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.. ADSP வெள்ளத்துரை பணியிடை நீக்கம் ரத்து - சில மணி நேரத்தில் திடீரென மாறிய உத்தரவு!

Ansgar R |  
Published : May 31, 2024, 10:58 PM IST
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.. ADSP வெள்ளத்துரை பணியிடை நீக்கம் ரத்து - சில மணி நேரத்தில் திடீரென மாறிய உத்தரவு!

சுருக்கம்

Velladurai : தமிழகத்தின் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படும் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை இன்று பணி இடை நீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குற்ற ஆவண காப்பக கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளரக பணியாற்றி வந்தவர் தான் வெள்ளத்துரை. தமிழக காவல்துறையை பொருத்தவரை இவர் வெறும் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை அல்ல, இவருக்கு ஒரு செல்லப் பெயரும் உண்டு, அதுதான் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை.

சில கடுமையான ரவுடிகளை ஒழிப்பதற்கு என்று உயிர்மற்ற அதிகாரிகள் இவரை பெரிய அளவில் பயன்படுத்தி வந்ததாகவும் சில தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழகத்தையே பரபரப்பில் பல ஆண்டுகள் அழித்தி வந்த சந்தன மரங்களை கடத்திய வீரப்பன் கொல்லப்பட்ட பொழுது அதற்காக பணியாற்றிய சிறப்பு அதிரடி படையில் வெள்ளதுறையும் முக்கிய பங்கு வகித்தார்.

திருமணத்திற்கு தேவையான நகைகளை யூடியூப் பார்த்து வழிப்பறி செய்த பொறியியல் பட்டதாரி - சென்னையில் பரபரப்பு

சென்னையை பொருத்தவரை பிரபல தாதா வீரமணியை மெரினா கடற்கரை அருகே போலீசார் என்கவுண்டர் முறையில் சுட்டு வீழ்த்திய பொழுது அந்த விஷயத்திலும் முக்கிய பங்கு வகித்தவர் வெள்ளத்துரை. இந்த சூழலில் தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கு தொல்லை தரும் நபர்களை தடுப்பதற்காக சிறப்பு படை கண்காணிப்பாளராக வெள்ளத்துரை நியமிக்கப்பட்டார். 

இந்த நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகங்கை திருப்பாசேத்தியில் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்ட குமார் என்கின்ற கொக்கி குமார் போலீஸ் காவலில் மர்மமான முறையில் மரணமடைந்தார். அந்த வழக்கு சிபிசிஐடி போலீஸ்சாருக்கு சென்று அதில் குற்றம் சாட்டப்பட்ட வெள்ளத்துரை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்பட்டது. 

இதனையடுத்து இன்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வெகு சில மணிநேரங்களில் அவருடைய அந்த பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களே நேரடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு அவருடைய அந்த பணியிட நீக்கத்தை ரத்து செய்ததாகவும் சில தகவல்கள் பரவி வருகின்றது.

அரசு அலுவலகங்களில் 3.25 லட்சம் காலி பணியிடங்கள்; திமுகவின் தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சி? தினகரன் கேள்வி

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சொன்ன மாதிரியே வெளுத்து வாங்கிய கனமழை.! அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Tamil News Live today 02 January 2026: சொன்ன மாதிரியே வெளுத்து வாங்கிய கனமழை.! அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!