திருமணத்திற்கு தேவையான நகைகளை யூடியூப் பார்த்து வழிப்பறி செய்த பொறியியல் பட்டதாரி - சென்னையில் பரபரப்பு

By Velmurugan sFirst Published May 31, 2024, 7:36 PM IST
Highlights

ஆன்லைன் டிரேடிங்கில் தொடர்ந்து பணத்தை இழந்த பொறியியல் பட்டதாரி தனது திருமணத்திற்கு தேவையான நகைகளை யூடியூப்பை பார்த்து கற்றுக் கொண்டு வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடுத்த சேலையூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காமராஜபுரம், நேதாஜி தெருவை சேர்ந்தவர் சீதாலட்சுமி (வயது 70). இவரிடம் சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் இரண்டு சவரன் தங்கச் செயினை பறித்து சென்றுள்ளார். அதே போல, கிழக்கு தாம்பரம், ஆஞ்சநேயர் கோவில் தெருவில் நித்திய சுபா (49) என்பவரிடம் ஐந்து சவரன் தங்கச் செயினை பறித்து மர்ம நபர் சென்றுள்ளார். இந்த இரண்டு சம்பவங்களும் சிசிடிவி கேமராவில் பதிவாகி அதில் குற்றவாளி செயனுடன் தப்பி செல்வது பதிவாகி இருந்தது.

இதனைத் தொடர்ந்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் சேலையூர் போலீஸ் உதவி கமிஷனர் கிறிஸ்டின் ஜெயசீல் தலைமையில் சேலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு, சப் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

Latest Videos

ஆன்லைன் செயலில் பணத்தை இழந்த தம்பதி குடும்பத்தோடு தற்கொலை முயற்சி; திருப்பூரில் 6 வயது சிறுமி பலி

அதில் செயினை பறித்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிய இளைஞர் எங்கெல்லாம் சென்றார் என்று பார்த்தபோது அவர் காமராஜபுரம், மப்பேடு, அகரம், பெருங்களத்தூர், முடிச்சூர், படப்பை என இறுதியாக மடிப்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டிற்கு சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து அந்த வீட்டிற்கு சென்ற தனிப்படை போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த நபர் கோவில்பட்டியைச் சேர்ந்த அருணாச்சலம் (27) எனவும், மடிப்பாக்கம், ராம் நகர் பகுதியில் குடும்பத்துடன் சொந்த வீட்டில் தற்போது வசித்து வருவதும், பி.இ சிவில் இன்ஜினியரிங் முடித்து வேலை கிடைக்காததால் ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் செலுத்தியுள்ளார். அதில் இரண்டு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்ட பின்னர் அவரது தங்கையின் 10 சவரன் நகைகளை வங்கியில் வைத்து அந்த பணம் மற்றும் கடனாக பெற்ற பணத்தில் மீண்டும் ஆன்லைன் வர்த்தகத்தில் செலுத்தியுள்ளார்.

தொண்டையில் சிக்கிய புரோட்டா; மூச்சு திணறி உயிரிழந்த கட்டிட தொழிலாளி - குமரியில் பரபரப்பு

அதிலும் நஷ்டம் என மொத்தமாக சுமார் 15 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் ரேபிடோவில் பைக் ஓட்டி வந்ததோடு தனது ஜாதகத்தை ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருந்தபோது அதில் செயின் பறிப்பு, யூடியூப் வீடியோக்கள் ஏராளமாக வந்துள்ளது. இதை பார்த்து செயின் பறிப்பில் ஈடுபடலாம் என முடிவு செய்த அவர் சாலையில் தனியாக செல்லும் பெண்களை நோட்டுமிட்டு சீதாலட்சுமி, நித்திய சுபா ஆகிய இருவரிடமும் செயின் பறிப்பில் ஈடுபட்டு அதில் 5 சவரன் நகையை தனது திருமணத்திற்காக வீட்டில் கொடுத்துள்ளார்.

இரண்டு சவரன் நகையை தனியார் கோல்ட் பைனான்ஸ் நிறுவனத்தில் வைத்து பணம் பெற்றதும் தெரிய வந்தது. வரும் 10ம் தேதி இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

click me!