3வது முறை மீண்டும் மோடி.? கடைசியில் முதலமைச்சர் ஸ்டாலினின் பிளான் கேன்சல்.. பிரதமர் தான் காரணமா.?

By Raghupati RFirst Published May 31, 2024, 5:40 PM IST
Highlights

இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவிருந்த நிலையில் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான பல்வேறு காரணங்கள் வெளியாகி உள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ல் வெளியாகும் நிலையில் இந்தியா கூட்டணி ஜூன் 1ம் தேதி ஆலோசனை நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் இறுதி கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கும் நிலையில் டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். 

இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர் பாலு பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தலில் இருமுனை போட்டியே நிலவுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி இடையே தான் போட்டி நிலவுகிறது. மக்களவை தேர்தலில் பாஜகவை பொறுத்தவரை 400 தொகுதிகளில் வென்று பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

தற்போது இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 270க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதால் நிச்சயம் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என இந்தியா கட்சி கூட்டணி தலைவர்கள் சொல்லி வருகின்றனர். ஆனால் கருத்துக் கணிப்பு சொல்வதோ மீண்டும் பாஜக ஆட்சி வரும் என்பது தான். பாஜக அல்லது காங்கிரஸ் ஆட்சி எது அமைக்கும் என்பது ஜூன் 4ல் தெரியும்.  மக்களவை தேர்தல் முடிவுகள் ஜூன் 4ல் வெளியாகும் நிலையில், இந்தியா கூட்டணி ஜூன் 1ல் டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் நடைபெறும் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் திமுக சார்பில் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. மீண்டும் பிரதமர் மோடியே ஆட்சி அமைப்பார் என்று பலரும் கூறிவரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு இது காரணமாக இருக்குமோ என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

click me!