
ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர வேண்டி மதுரையில் 1 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்கும் பணி தொடங்கியுள்ளது.
தமிழகர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் கடந்த சில ஆண்டுகளாக உச்சநீதிமன்ற உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு அறிவித்தபடி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை வலியுறுத்தியுள்ளது.