Power Shutdown in Chennai:சென்னையில் இன்று 5 மணி நேர மின் தடை... எந்த எந்த பகுதிகள் தெரியுமா.?

Published : Oct 09, 2023, 06:33 AM IST
Power Shutdown in Chennai:சென்னையில் இன்று 5 மணி நேர மின் தடை... எந்த எந்த பகுதிகள் தெரியுமா.?

சுருக்கம்

மின்பாதை பராமரிப்புகாக சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படவுள்ளது.

சென்னையில் மின்சாரம் தடை அறிவிப்பு

துணை மின் நிலையம், மின்சார பாதை சீரமைப்பு, புதிய மின் கம்பம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினந்தோறும் ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அந்த வகையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படவுள்ள இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய காலனி:

கடபேரி, அன்னை இந்திரா நகர், நியூ காலனி 1வது மெயின் ரோடு முதல் 7வது மெயின் ரோடு, 3வது குறுக்குத் தெரு முதல் 8வது குறுக்குத் தெரு, ஜகதா அவென்யூ மற்றும் ஊமியாள்புரம் பகுதி ஆகிய பகுதிகளில் 5 மணி நேர தடை செய்யப்படவுள்ளது.  திங்கள்கிழமை (09.10.2023) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை  மின் விநியோகம் நிறுத்தப்படும் . பணிகள் முடிவடைந்தால், பிற்பகல் 02.00 மணிக்கு முன் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

பரபரப்பான சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று கூடுகிறது... காவிரி விவகாரத்தில் முக்கிய தீர்மானம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஷாக்கிங் நியூஸ்! விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு!
Govt Business Training: நீங்களும் ஆகலாம் தொழிலதிபர்.! சென்னையில் 5 நாள் பயிற்சி.! A to Z கத்துக்கலாம் வாங்க.!