திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் ஐடி சோதனை.. ரூ.2.50 கோடி பறிமுதல்..

By Raghupati R  |  First Published Oct 8, 2023, 7:59 PM IST

திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.


முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

பூந்தமல்லியில் உள்ள ஒரு கல்லூரி, ஆவடி அருகே உள்ள பட்டாபிராமில் உள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஒரு வீடு என பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ஜெகத்ரட்சகனின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரது வீடுகள் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

Latest Videos

undefined

முன்னதாக, கடந்த 2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் எழுந்ததன் பேரில், ஜெகத்ரட்சகனின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

வெளிநாட்டில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டது தொடர்பாக, அவருக்கு சொந்தமான ரூ.89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புள்ள இடத்திலிருந்து ஏற்கனவே ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இப்போது மேலும் ரூ.2.50 கோடி சிக்கியுள்ளது என்று கூறப்படுகிறது. சவிதா கல்விக்குழுமம் தொடர்புடைய இடங்களிலிருந்து ஏற்கனவே ரூ.10 கோடியும் இப்போது கூடுதலாக ரூ.2 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற சோதனையில் ரூ.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கம்மி விலையில் கோவாவை சுற்றி பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் சிறந்த டூர் பேக்கேஜ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

click me!