தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுமா? மின்சார வாரியம் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

Published : Jun 07, 2023, 02:56 PM ISTUpdated : Jun 07, 2023, 02:57 PM IST
 தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுமா? மின்சார வாரியம் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!

சுருக்கம்

மின் வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் விண்ணப்பித்தது. அதனடிப்படையில், மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்ததை அடுத்து  மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் மின் கட்டணம்  உயர்த்தப்படாது என மின்சார வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மின் வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் விண்ணப்பித்தது. அதனடிப்படையில், மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்ததை அடுத்து  மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 

இந்நிலையில், மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. நுகர்வோர் விலைக் குறியீடு உயர்வின் அடிப்படையில், மின் கட்டணத்தை  உயர்த்த  மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் பரவியது.

மின் கட்டணத்தை உயர்த்த கூடாது என எதிர்க்கட்சிகள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தனது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில், ஜூலை மாதம் மின் கட்டணம்  உயர்த்தப்படாது என மின்சார வாரியம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை