பார்த்தசாரதி கோயிலுக்கு ரூ.55 லட்சம் மதிப்பிலான தங்கச்சடாரி..! அன்பளிப்பாக வழங்கிய நகைக்கடை அதிபர்

By Ajmal KhanFirst Published Jun 7, 2023, 1:56 PM IST
Highlights

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கச்சடாரியை தங்கநகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவருமான ஜெயந்திலால் சலானி அன்பளிப்பாக வழங்கினார். 

பார்த்தசாரதி கோவில்-தங்க சடாரி

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவில் மிகவும் பிரபலமானது ஆகும். நாள்தோறும் ஆயிரக்கணக்காக பக்தர்கள் கோயிலுக்கு சென்று வழிபாட்டில் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில் பார்த்தசாரதி கோவிலுக்கு சலானி தங்க நகைக்கடையின் உரிமையாளரும், தங்கநகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவருமான ஜெயந்திலால் சலானி,  850 கிராம் எடையுள்ள தங்க சடாரியை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி கோவிலின் துணை ஆணையர் பெ.க.கவெனிதா  அவர்களிடம் வழங்கினார். இதனை தொடர்ந்து பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்திலால் சலானி, பார்த்தசாரதி கோவில் நிர்வாகத்திடம் கோவிலுக்கு என்ன வேண்டும் என கேட்ட போது, தங்க சடாரி வேண்டும் என கோரியதையடுத்து, 

 தங்களது குடும்பத்தின் சார்பாக வழங்கியதாகவும், இது தங்கள் குடும்பத்துக்கு கிடைத்த பெருமையாகவும் ஆசீர்வாதமாகவும் கருதுவதாக தெரிவித்தார்.  சடாரி எப்படி இருக்க வேண்டும் என கோவில் நிர்வாகத்தின் ஆலோசனையை பெற்று வடிவமைத்ததாகவும், துல்லியமான வேலைபாடுகளுடன் ஆறு மாத காலம் முழுக்க முழுக்க கைகளால் வடிவமைத்ததாகவும், இதன் மதிப்பு 55 லட்சம் என தெரிவித்தார்.  

பெருமாள் கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு தலையில் சடாரி வைத்து ஆசீர்வதிப்பது வழக்கம். பெருமாளுடைய திருப்பாதங்களை பணிந்து ஆசீர்வாதம் பெறுவதற்கு இணையானது தான் இந்த சடாரி வழிமுறை.சடாரி ஆசீர்வாதம் பெற்றால் சுபிக்‌ஷம் கிடைக்கும் என நம்பப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

ஒரு சிலரின் பண திமிரால், சுயநலத்தால் பிரிந்து நிற்கிறோம்..! ஓபிஎஸ்யோடு கைகோர்த்த டிடிவி தினகரன் ஆவேசம்

click me!