“சென்னைக்கு வருகிறது புதிய பேட்டரி பஸ்” - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

First Published Jun 12, 2017, 1:09 PM IST
Highlights
electric bus coming soon to chennai says vijayabaskar


சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு பல்வேறு பகுதிகளில் மேம்பாலங்களை கட்டி வைத்துள்ளது.

மேலும், மெட்ரோ ரயில் திட்டமும் தற்போது செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்கிடையில், புகை மற்றும் மாசுபடுவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இந்நிலையில், புகை மற்றும் மாசுபடுவதை தடுக்க அரசு சார்பில் பேட்டரி மூலம் இயங்கும் பஸ்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி அசோக் லே லாண்டு நிறுவனம் சார்பில் பேட்டரி பஸ் தயாரிக்கப்பட்டு, இன்று சோதனை ஓட்டம் நடந்தது.

போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், புதிய பேட்டரி பஸ் இயக்கத்தை தொடங்கி வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.

சென்னையில் புதிதாக பேட்டரி பஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்தை சீர் செய்யவும், நவீனமுறைப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் பொதுமக்களுக்கு சுகமான பயணம் கிடைக்க வேண்டும் என சோதனை ஓட்டம் நடந்தது.

பேட்டரி பஸ் நல்ல முறையில் இயங்குகிறது. இனி வரும் காலத்தில் பேட்டரி பஸ்கள் புதிதாக வாங்கி, இயக்கப்படும். வெளிநாடுகளில் பெரும்பாலும் பேட்டரி பஸ்கள் இயக்கப்படுகிறது. தற்போது நாமும் அதை பயன்படுத்த தொடங்கியுள்ளோம்.

பேட்டரி பஸ் தயாரிக்க வேண்டும் என அசோக் லே லாண்டு நிறுவனத்திடம் கேட்டு இருந்தோம். அதன்பேரில் பஸ் தயாரிக்கப்பட்டு, இன்று சோதனை ஓட்டம் நடந்து முடிந்தது. அடுத்து டாடா நிறுவனத்திடம் ஒப்பந்தம் கொடுத்துள்ளோம். அந்த பஸ் வந்தவுடன், புதிய பேட்டரி பஸ்கள் வாங்கப்பட்டு, மநாகர போக்குவரத்து கழகத்துக்கு வழங்கப்படும்.

முன்னதாக அந்த பஸ்கள் எத்தனை கிலோ மீட்டர் செல்லும். தொழில்நுட்பத்தில் உள்ள வசதிகள் குறித்து ஆய்வு நடத்தப்படும். குறிப்பாக குளிர் சாதன பஸ் கேட்டு இருக்கிறோம். இதனால் புகை, நச்சுத்தன் இருக்காது. சத்தமும் இல்லாமல் இருக்கும். பஸ் இயக்கப்படுவதே அறிய முடியாது.

தமிழக போக்குவரத்து கழகத்துக்கு விரைவில் 2000 புதிய பஸ்கள் வாங்கப்படும். அதற்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதல் அறித்துள்ளார். இதையடுத்து பழைய பஸ்கள் மாற்றப்படும்.

போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை சுமுகமாக நடந்து முடிந்துள்ளது. விரைவில் இதற்கான முடிவு அறிவிக்கப்படும்.

மாநகர போக்குவரத்து கழகம் அயனாவரம் பணிமனை கேன்டீனில் பிளாஸ்டிக் அரிசி பயன்படுத்துவதாக பேசப்பட்டது. இது முற்றிலும் தவறு. இதுபோன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். பிளாஸ்டிக் அரிசி என்பதே இல்லை. இது 100 சதவீதம் உண்மை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

click me!