உயர்ந்து கொண்டே போகும் பாலின் கலப்பட எண்ணிக்கை...!!! – இன்று மட்டும் எத்தனை தெரியுமா...?

First Published Jun 12, 2017, 12:16 PM IST
Highlights
contamination in milk increasing higher


மதுரை மேலூர் முகாமில் பரிசோதனை செய்யப்பட்டதில் கொழுப்பின் அளவு நீரின் அளவை வைத்து இதுவரை 7 மாதிரி பாலில் கலப்படம் செய்யபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சில தினங்களுக்கு முன்பு சில தனியார் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக பகீர் குற்றசாட்டை எழுப்பினார்.

மேலும் பாலை புனேவில் உள்ள பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையடுத்து புனேவின் ஆய்வு மையம் எந்த பாலும் எங்களிடம் பரிசோதனைக்கு வரவில்லை என தெரிவித்தது. இதனால் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது சொந்த ஆதாயத்திற்காக குற்றம் சாட்டி வருவதாக எதிர்கட்சிகள் குற்றசாட்டுக்களை எழுப்பினர்.

இதைதொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார். மேலும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கூறியுள்ளார்.

பின்னர், பாலின் தரத்தை கண்டறிய தமிழகத்தில் ஆய்வு முகாம் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி முன்னோடியாக மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக, பாலின் தரத்தை கண்டறிய இலவச பரிசோதனை முகாம் பல்வேறு இடங்களில் நத்தப்பட்டு வருகிறது.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட சோதனையில் ஆய்வுக்கு வந்த 108 மாதிரிகளில் ஒரு மாதிரியில் மட்டும் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைதொடர்ந்து மேலூர் முகாமில் இன்று இதுவரை 85 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் ஒரு மாதிரியில்  பால் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டது. பால் கொழுப்பு அளவு 3.5 % இருப்பதற்கு பதிலாக 3%இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், சோதனையில் மேலும்,  6 பால் மாதிரியில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது.

click me!