தமிழகத்தில் 27 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையம்! வெளியான லிஸ்ட்! என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Mar 16, 2024, 1:33 PM IST

தமிழகத்தில் தேர்தல் கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது.  இந்நிலையில் தமிழகத்தில் 2021 முதல் 2024 மார்ச் 15-ம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட 27 வேட்பாளர்களின் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ளது.


தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் செலவின கணக்கு 30 நாட்களுக்குள் தலைமை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்துள்ளது.

Tap to resize

Latest Videos

 அதன்படி தமிழகத்தில் 2021 முதல் 2024 மார்ச் 15-ம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட 27 வேட்பாளர்களின் பட்டியலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தலைமை தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ளது. அதில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட்ட 27 வேட்பாளர்கள் பேரின் பெயர் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பட்டியலை கையில் வைத்திருக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. செலவு கணக்கு தாக்கல் செய்ய தவறும் வேட்பாளர்களுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!