"சீக்கிரம் வரப்போகுது எல் நினோ…வெளுத்து வாங்கப் போகுது மழை…" அடித்து சொல்லுது வானிலை மையம்…

 
Published : May 10, 2017, 10:20 AM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
"சீக்கிரம் வரப்போகுது எல் நினோ…வெளுத்து வாங்கப் போகுது மழை…" அடித்து சொல்லுது வானிலை மையம்…

சுருக்கம்

el nino cyclone formed

எல் நினோ  காரணமாக இந்த ஆண்டு சராசரிக்கும் அதிகமாக பருவமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எல் நீனோ (El -nino ) என்பது பசிபிக் பெருங்கடலின் கடற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தை குறிக்கிறது.அதாவது குறிப்பிட்ட காலங்களுக்கு ஒரு முறை பசிபிக் கடல் பரப்பின் வெப்பநிலையானது  சராசரி வெப்பநிலையினை  விட அதிகமானதாக இருக்கும்.

அந்த பசிபிக் கடல் பரப்பில் ஏற்படும் வெப்பநிலை உயர்வை தான் எல் நினோ என்று சொல்கிறார்கள்.

இந்தியாவை பொருத்தவரை எல் -நினோ தென்மேற்கு பருவமழையின் போக்கை மாற்றி அமைத்து விடும் அதே சமயம் லா -நினோ வால் சரியான நேரத்தில் சரியான அளவில் மழை பெய்யக்கூடும்.

இந்நிலையில்  இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவில் சராசரி பருவமழையின் அளவு 89 செ.மீ., என உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சராசரியை விட கூடுதலாக, அதாவது 96 சதவீதம் அளவிற்கு பருவமழை பெய்யும் என்றும்  இதனால் விவசாயம் உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என்றும் வானிலை ஆண்வு மையம் தெரிவித்துள்ளது.

எல் நினேவும் இந்திய பருவமழைக்கு சாதகமாக சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பருவமழை கூடுதலாக பெய்யும் என்பதால் விவசாய உற்பத்தி 15 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் கடந்த ஆண்டு மழை அளவு போதிய அளவு இல்லாததே அரிசி உள்ளிட்ட பயிர்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு நாட்டின் ஒரு பகுதிக்கு மட்டுமல்லாது, நாடு முழுவதற்கும் போதிய அளவு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!