
தமிழக மக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் எனவும், குடிநீர் பற்றாக்குறையை போக்க 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பொய்த்து போனதால் தமிழகத்தில் உள்ள அணைகள், ஏரிகளின் நீர்மட்டம் பெருமளவில் குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகியியுள்ளது.
இதுகுறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் மழை குறைந்துள்ளதால் 142 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது.
தமிழக மக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
தமிழகம் முழுவதும் குடிநீர் பற்றாக்குறைய போக்க 900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னை வாரியத்திற்கு மட்டும் 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீராதார வாழ்வாதாரங்களை அழிக்கும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கைப்பம்புகளை சீரமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.
வறட்சி நிலவும் இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் கொண்டுவரப்படும்.
தற்போது மழை குறைந்துள்ளதால் தமில்கத்தில் மழை பெய்ய வேண்டும். அதற்காக அனைவரும் கடவுளை பிரார்த்திப்போம்.
தமிழகம் முழுவதும் 1000 தண்ணீர் தொட்டிகள் புனரமைக்கப்படும் பணிகள் நடைபெறுகிறது.
தற்போது உள்ள நீரை அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.