
தமிழக மீனவர் சுட்டுகொல்லப்பட்டதையடுத்து இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 85 பேரும் விடுவிக்கபடுவார்கள் என வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம் தங்கச்சிமட மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி படகின் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் பிரிட்ஜோ என்ற தமிழக மீனவர் உயிரிழந்தார். மேலும் ஒரு மீனவர் பலத்த காயமடைந்தார்.
இதனால் தமிழகத்தில் மீனவர்கள் துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படை காவலரை கைது செய்ய வேண்டும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளோடு போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
இதையடுத்து இந்தியா – இலங்கை உயரதிகாரிகள் கொண்ட குழு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது.
இந்நிலையில், இலங்கை சிறைகளில் உள்ள இந்திய மீனவர்கள் 85 பேரும் விடுவிக்கப்படுவர் என்று இந்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் கோபால் பாக்லே தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோபால் பாக்லே பேசியதாவது :
துப்பாகிசூட்டுக்கும் இலங்கை அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என இலங்கை அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 85 பேரை விடுவிக்க இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
மீனவர்கள் விடுதலை தொடர்பாக இலங்கையின் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக காத்திருகிறோம்.
இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இனிமேல் இது போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடக்காது எனவும் இலங்கை உறுதியளித்திருகிறது.
எச் 1பி விசா தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.