EPS : திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை.! நமக்கு நாமே பாதுகாப்பு.!-விளாசும் எடப்பாடி

By Ajmal Khan  |  First Published Jul 9, 2024, 12:31 PM IST

தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பதாக கூறியுள்ளார். 


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக  தொடர்ந்து கொலை, கொள்ள சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை, பாமக நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை என தினந்தோறும் வரும் செய்திகள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நிலையில் தமிழக சட்டம் ஒழுங்கு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், 

Tap to resize

Latest Videos

மீண்டும் கொலை.! ஜிகர்தண்டா கடையில் அப்பாவி போல் வேலை பார்த்த ரவுடி- சுற்றி வளைத்து போட்டுத்தள்ளிய மர்ம கும்பல்

கடந்த 24 மணிநேரத்திற்குள் வந்த செய்திகள்:

●புதுக்கோட்டையில் மர்மநபர்களால் இளைஞர் வெட்டிப் படுகொலை.

●தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் 21 வயது இளைஞர் வெட்டிப்படுகொலை.

●தேனியில் குண்டர் சட்டத்தில் சிறைசென்று வந்தவரை கொடிய ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கொல்ல முயற்சி.

நமக்கு நாமே பாதுகாப்பு

இனி இந்த விடியா திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்த பயனும் இல்லை. எனவே, மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன். விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது.  மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு! என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

Armstrong : ஆம்ஸ்ட்ராங் வீட்டில் முதலமைச்சர் ஸ்டாலின்.. புகைப்படத்திற்கு அஞ்சலி- குடும்பத்தினருக்கு ஆறுதல்

click me!