ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக திமுக அரசை தட்டி கேட்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சி சங்கீகளாக மாறிவிட்டீர்களா? திலகபாமா!

By vinoth kumar  |  First Published Jul 9, 2024, 12:30 PM IST

ஒரு பக்கம் கஞ்சா போதைப் பொருளுக்கு எதிராக இந்த அரசால் பெயரளவிற்கு ஒன்று இரண்டு என்று திட்டங்களைத் தான் சொல்ல முடிகிறதே தவிர தமிழகத்தில் எல்லா இடத்திலும் எல்லா போதை பொருட்களும் கிடைக்கின்றது. இந்த மூன்று ஆண்டுகளில் இதற்கு முன்பாக இருந்ததை விட பன்மடங்கு போதைப்பொருள் நடமாட்டம் உயர்ந்திருக்கிறது.


விக்கிரவாண்டி தேர்தல் புதிய சரித்திரத்தை கொண்டு வரும் மக்கள் பணத்தை திருப்பி கொடுக்கும் மனநிலையில் உள்ளனர். அவ்வளவு மோசமாக திமுகவின் ஆட்சி நடந்திருக்கிறது என திலகபாமா கூறியுள்ளார். 

மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள தனியார் தங்கு விடுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக பொருளாளர் திலகபாமா: மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நாடாளுமன்றத்தில்  செங்கோலுக்கு எதிராக பேசுவதாக நினைத்துக்கொண்டு அவமரியாதையாகவும் தமிழ் மன்னர்கள் குறித்து தரக்குறைவாகவும் பேசியுள்ளார். 

Tap to resize

Latest Videos

விக்கிரவாண்டி தேர்தல் புதிய சரித்திரத்தை கொண்டு வரும் மக்கள் பணத்தை திருப்பி கொடுக்கும் மனநிலையில் உள்ளனர். அவ்வளவு மோசமாக திமுகவின் ஆட்சி நடந்திருக்கிறது. மக்கள் வேறொரு களத்தை காண எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள் விக்கிரவாண்டி அதனை நிரூபிக்கும். ஆம்ஸ்ட்ராங் கொலை நம்மை எல்லாம் பதற வைத்திருக்கிறது சட்ட ஒழுங்கு என்னவாக இருக்கிறது என்பது மிக முக்கியமான கேள்வியாக நம் முன்னால் நிற்கிறது. ஒரு பக்கம் கஞ்சா போதைப் பொருளுக்கு எதிராக இந்த அரசால் பெயரளவிற்கு ஒன்று இரண்டு என்று திட்டங்களைத் தான் சொல்ல முடிகிறதே தவிர தமிழகத்தில் எல்லா இடத்திலும் எல்லா போதை பொருட்களும் கிடைக்கின்றது. இந்த மூன்று ஆண்டுகளில் இதற்கு முன்பாக இருந்ததை விட பன்மடங்கு போதைப்பொருள் நடமாட்டம் உயர்ந்திருக்கிறது.

இதையும் படிங்க: வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா? ஆம்ஸ்ட்ராங் கொலையை சுட்டிக்காட்டி திமுக அரசை விளாசும் பா.ரஞ்சித்!

இதனால் நடைபெறும் மரணங்கள் அதிகரித்திருக்கிறது. மது குடித்துவிட்டு தெருவில் விழுந்து இறந்து கிடக்கிறார்கள் அதையெல்லாம் மதுவால் இறந்த மரணமாக கருதவில்லை. ஆனால் அரசின் அலட்சியத்தால் அராஜகத்தால் இவர்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களால் காய்ச்சி வசூல் பண்ணுவதற்காக அனுமதிக்கப்பட்ட கள்ளச்சாராயத்தால் 63 பேர் உயிரிழந்தவர்களுக்கு பணத்தை கொடுத்து வாயை அடைகிறார்கள். இந்த மாதிரியான போக்குகளில் தான் தமிழக அரசு இருக்கிறது. திமுக இதனை  கொண்டாடி கொண்டிருக்கிறது.

சு.வெங்கடேசன் ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக எதிர்த்து பேச வேண்டிய கள்ளச்சாரய விவரத்தை எதிர்த்து பேச வேண்டிய திமுக அரசை தட்டி கேட்க வேண்டிய கம்யூனிஸ்ட் கட்சி நீங்கள் சங்கீகளாக மாறிவிட்டீர்களா? என்று கேட்கும் அளவிற்கு இருக்கிறீர்கள். இதனை வன்மையாக கண்டிக்கிறோம் மதுரை மண்ணிலிருந்து செங்கோலுக்கு எதிராக நீங்கள் இப்படி பேசி இருக்கக் கூடாது என்றார்.

click me!