திமுகவிற்கு செக் வைக்க அண்ணாமலையை தொடர்ந்து ஆளுநரை சந்தித்த எடப்பாடி.!! என்ன புகார் கொடுத்தாங்க தெரியுமா.?

Published : Jun 25, 2024, 02:11 PM IST
திமுகவிற்கு செக் வைக்க அண்ணாமலையை தொடர்ந்து ஆளுநரை சந்தித்த எடப்பாடி.!! என்ன புகார் கொடுத்தாங்க தெரியுமா.?

சுருக்கம்

கள்ளக்குறிச்சியில் காவல் நிலையத்திற்கும் கள்ளச்சாராயம் விற்பனை செய்த இடத்திற்கும் இடைவெளி 300 அடி தூரம் தான் உள்ளது எனவும், இதனை கூட கண்டுகொள்ளாமல் திமுக அரசு இருந்துள்ளதாக  எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

உயரும் கள்ளச்சாராய மரணம்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பாக தற்போது வரை 60 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தமிழக சட்டசபையில் அதிமுக கடும் அமளியில் ஈடுபட்டது. இதனையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தியது. இன்று ஆளுநர் மாளிகைக்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான எம்எல்ஏக்கள் குழு கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்து மனு கொடுத்தது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, 

மனு கொடுத்துவிட்டால் ஆளுநர் ஆட்சியை கலைத்துவிடுவாரா? நாங்கள் சும்மா விடுவோமா? முத்தரசன் ஆவேசம்

சட்டசபையில் அதிமுக அமளி

கள்ளக்குறிச்சி மாவட்டம் மையப் பகுதியில், கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. காவல் நிலையத்திற்கும் கள்ளச்சாராயம் விற்பனை செய்த இடத்திற்கும் இடைவெளி 300 அடி தூரம் தான். அந்த பகுதியை சுற்றித்தான் மாவட்ட ஆட்சியாளர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் அலுவலகம் இருக்கிறது, டிஎஸ்பி காவல் ஆய்வாளர்கள் அனைவரும் உள்ள நிலையில் அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் பகிரங்கமாக  விற்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விழுப்புரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 22 பேர் மரணம் அடைந்துள்ளார்கள்.  அப்பொழுது முதலமைச்சர்  ஸ்டாலின்  இனி தமிழகத்தில் கள்ளச்சாராய சாவு இருக்காது, இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படும் என்ற செய்தியை வெளியிட்டார். ஆனால் தற்போது கள்ளச்சாராயத்தில் 60 பேர் உயிரிழந்தது எப்படி என கேள்வி எழுப்பினார்.  

முதல்வர் பதவி விலகனும்

கள்ளச்சாராய மரணம் தொடர்பாக  தமிழக அரசில் நியமிக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் மூலம் மக்களுக்கு நியாயம் கிடைக்காது. சிபிசிஐடி விசாரணையிலும் நியாயம் கிடைக்காது என கூறினார். எனவே கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்த காரணத்தை வைத்து தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் பொறுப்பில் இருந்து விலக வேண்டும், இந்த விசாரணை நியாயமாக நடக்கும் வேண்டுமென்றால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது என்றால் அது வனத்துறைக்கு தெரியாமல் நடைபெறாது.  கள்ளச்சாராயம் விற்றவர்களுக்கு ஆளும் கட்சியுடன் தொடர்பில்லாமல் இருக்க முடியாது.  ஆட்சி அதிகார பலத்தை வைத்து இந்த கள்ள சாராயத்தை விற்க்கப்பட்டதாக  தகவல் வருகிறது. தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயத்தை சோதனை செய்து அழித்து வருகிறார்கள் இதை முன்கூட்டியே செய்திருந்தால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

சூப்பர் அறிவிப்பு... 75 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்.! எப்போ தெரியுமா.? ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!