TN Local Body Election Results 2022 :சேலம் மாநகராட்சி திமுக கோட்டையானது..எடப்பாடி நகராட்சியில் அதிமுக தோல்வி

Published : Feb 22, 2022, 01:34 PM ISTUpdated : Feb 22, 2022, 06:12 PM IST
TN Local Body Election Results 2022 :சேலம் மாநகராட்சி திமுக கோட்டையானது..எடப்பாடி நகராட்சியில் அதிமுக தோல்வி

சுருக்கம்

அதிமுக கோட்டையாக இருந்த சேலம் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது

சேலம் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன.இதில் திமுக 48 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்.முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொந்த மாவட்டமான சேலம் மாவட்டதில் மாநகராட்சி, நகராட்சி,பேரூராட்சி அனைத்திலும் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.இது அதிமுக வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும்எடப்பாடி  பழனிசாமி வசிக்கும் சேலம் நெடுஞ்சாலை நகர், 23 ஆவது வார்டிலும் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.திமுக கட்சியின் வேட்பாளராக களம் கண்ட சிவகாமி அறிவழகன், 3,694 வாக்குகள் பெற்று, சுமார் 1,300 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு கட்சி உறுப்பினர்கள் பலரும், பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் எடப்பாடி நகராட்சியையும் திமுக கைப்பற்றியுள்ளது.அதுப்போல், ஆத்தூர், மேட்டூர்,தாரமங்கலம்,இடங்கணசாலை,நரசிங்கபுரம், ஆகிய நகராட்சிகளையும் திமுக தட்டி தூக்கியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!
முக்தாரை உடனடியா கைது செய்யுங்க.. தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்.. அரசுக்கு சரத்குமார் எச்சரிக்கை