எம்ஜிஆர் தொண்டர்களை அதிமுகவிலிருந்து விரட்டுவதை நோக்கமாக கொண்டிருக்கிறாரா இபிஎஸ்? சொல்வது யார் தெரியுமா?

Published : Jul 21, 2025, 02:02 PM IST
edappadi Palanisamy

சுருக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ள நிலையில், அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்த அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார். 

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக - அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. பாஜகவுடன் கூட்டணிக்கு அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி கட்சியின் சில முக்கிய நிர்வாகிகளும் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டு வந்தது. அந்த வகையில் அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்த அன்வர் ராஜா அதிமுக -பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்து கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாகவே கூறப்பட்டு வந்தது.

அன்வர் ராஜா திமுகவில் ஐக்கியம்

சமீபத்தில் பேட்டியளித்த அன்வர் ராஜா தமிழ்நாட்டில் பாஜகவால் ஒரு போதும் காலூன்ற முடியாது. கூட்டணிக்கு தலைமை அதிமுக தான், தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். இதை பாஜக ஏற்கவில்லை என்றால், இரு கட்சிகளுக்கான ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை என கூறியிருந்தார். இந்நிலையில் இன்று காலை அன்வர் ராஜா தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

கே.சி.பழனிசாமி விமர்சனம்

இந்நிலையில் தன்னையும், தன் குடும்பத்தையும், சக அமைச்சர்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமே கட்சியினுடைய தலைமை பொறுப்பை தன் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என கே.சி.பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: எம்ஜிஆர் தொண்டர்களை அதிமுகவிலிருந்து விரட்டுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறாரா? அல்லது மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை அதிமுகவில் நீடிக்க விடக்கூடாது என்று நினைக்கிறாரா எடப்பாடி? பாஜகாவுடன் கூட்டணி வேண்டாம் என்பது 90% அதிமுக தொண்டர்களின் கருத்து. இந்தக் கருத்தை வலியுறுத்திய கே.சி.பி 2018ல் நீக்கப்பட்டார், மீண்டும் இணைத்துக் கொள்வதாக 2019ல் தலைமைச் செயலகத்தில் சந்தித்து விட்டு பின்னர் அறிவிப்பு வெளியிட மறுத்து விட்டார் எடப்பாடி.

இது தொண்டர்களை ஏமாற்றும் செயல்

இப்பொழுதும் பாஜக உடனான கூட்டணி ஆட்சிக்கு "நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல" என்று நேற்று பேசி இருக்கிறார் எடப்பாடி. இது தொண்டர்களை ஏமாற்றும் செயல். கூட்டணி ஆட்சி இல்லை என்கிற அவரது கருத்தை ஏற்றுக் கொள்வதாக அமித்ஷாவோ மற்ற பாஜக தலைவர்களோ தெரிவிக்கவில்லை. தன்னையும், தன் குடும்பத்தையும், சக அமைச்சர்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமே கட்சியினுடைய தலைமை பொறுப்பை தன் வசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் எடப்பாடி.

மகிழ்ச்சி அடைகிறாரா?

ஆட்சிக்கு வராவிட்டாலும் அவருக்கு கிடைக்கிற அனுகூல பலன்கள் திமுக மூலம் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் அவர் மகிழ்ச்சி அடைகிறாரா? அதிமுக தொண்டர்கள் தான் செய்வது அறியாத திகைத்து நிற்கிறார்கள். ஒரு மாற்று சிந்தனைக்கு வர வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறார்கள் என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!
திமுகவினர் என்னை இழிவாக பேசினார்கள்..! விஜய் நான் உங்கள் ரசிகன் என்றார்..! நாஞ்சில் சம்பத் பேட்டி!