கொடநாடு கொலை கொள்ளையில் பன்னீருக்கு தொடர்பு? மோடியிடம் போட்டு கொடுத்த எடப்பாடி!

Asianet News Tamil  
Published : May 24, 2017, 07:13 PM ISTUpdated : Sep 19, 2018, 12:39 AM IST
கொடநாடு கொலை கொள்ளையில் பன்னீருக்கு தொடர்பு? மோடியிடம்  போட்டு கொடுத்த எடப்பாடி!

சுருக்கம்

Edappadi palanisamy meeting with PM modi and Discuss about OPS

அதிமுகவில் உள்ள பன்னீர் அணி, எடப்பாடி அணி ஆகிய இரண்டையும் இயக்குவது பாஜக மேலிடம்தான் என்று, எதிர் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில், பிரதமரை, பன்னீரும், எடப்பாடியும் மாறி, மாறி சந்தித்து வருகின்றனர். 

கடந்த 19  ம் தேதி பிரதமரை சந்தித்த பன்னீர், முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் புகார் பட்டியலையும், அதற்கான ஆதாரங்களையும் அளித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

அதற்கு பதில் அளிக்கும் வகையில், இன்று பிரதமரை சந்தித்த முதல்வர் எடப்பாடி, கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில், பன்னீருக்கு தொடர்பு இருப்பதாக கூறி, அதற்கான ஆதாரங்கள் சிலவற்றையும் கொடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கோரினார் என்று சொல்லப்படுகிறது.

கடந்த ஆட்சியில், முதல்வர் ஜெயலலிதாவிற்கு தெரியாமல், சில   அமைச்சர்கள், கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தும், பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் மற்றும் எஸ்டேட்டுகள் வாங்கி போட்டதும் தெரியவந்தது.

அதனால், கோபமடைந்த ஜெயலலிதா, 2016 சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர், சம்பந்தப்பட்ட  அமைச்சர்களை வரவழைத்து, அவர்கள் வாங்கிய சொத்து பத்திரங்களை பறித்துக் கொண்டதுடன்,  வீட்டு காவலில் வைத்து பணம் அனைத்தயும் பறிமுதல் செய்தார் என்றும் கூறப்பட்டது.

இதை தேர்தல் பிரச்சாரத்தின்போது, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள். வீட்டு காவலில்  சிறை வைக்கப்பட்டனர் என்று  மேடையிலேயே வெளிப்படையாக கூறினார்.

அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட சொத்து பத்திரங்கள் மற்றும் பணத்தை, கொடநாடு எஸ்டேட்டிலேயே ஜெயலலிதா வைத்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.

அந்த சொத்து பத்திரங்களை  அங்கிருந்து  மீட்பதற்காகவே, கொடநாட்டில் கொலை மற்றும் கொள்ளை முயற்சி நடந்துள்ளதாகவும், அதில் பன்னீருக்கு தொடர்பு உள்ளதாகவும், பிரதமரிடம் எடப்பாடி, புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார் என்று கூறப்படுகிறது.

ஆனால் பிரதமரை சந்தித்த பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இருவருமே, நீட் தேர்வு, வறட்சி நிவாரண நிதி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து, பிரதமரிடம் பேசியதாகவே தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

அமித்ஷாவின் முரட்டு அடிமை., துரோகத்திற்கான நோபல் பரிசு..! இபிஎஸ்ஐ பொளந்து கட்டிய துணை முதல்வர்..
விஜய் மற்றும் அவரது தந்தை ஜெயலலிதா அவர்களிடம் கை கட்டி நின்றவர் தான் இன்று வீர வசனம் பேசுகிறார்