அதிமுக புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்!

By Manikanda Prabu  |  First Published Sep 27, 2023, 5:45 PM IST

அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்


தமிழ்நாட்டில் பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டுள்ளது. அண்மைக்காலமாக, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு அதிமுக தலைவர்களுக்கும் இடையே வார்த்தை போர் முற்றி வந்த நிலையில், நேற்று முன் தினம் நடைபெற்ற அதிமுக அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கன்னியாகுமரி கிழக்கு, திருச்சி மாநகர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களும், தஞ்சாவூர் கிழக்கு, தஞ்சாவூர் மத்திய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகர கழக செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Tap to resize

Latest Videos

இந்தியர்கள் விசா இல்லாமல் எந்தெந்த நாடுகளுக்கு பயணம் செய்யலாம்?

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் J. சீனிவாசன், பெரம்பலூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் இளம்பை இரா.தமிழ்ச்செல்வன், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம், காவிரி பகுதிக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ராம.ராமநாதன் ஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. அவர்களின் முக்கிய அறிவிப்பு.

கன்னியாகுமரி கிழக்கு, திருச்சி மாநகர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் கிழக்கு, தஞ்சாவூர் மத்திய மாவட்டங்கள். pic.twitter.com/VHpaOhJy9R

— AIADMK (@AIADMKOfficial)

 

மேலும், கன்னியாகுமரி கிழக்கு, திருச்சி மாநகர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களின், மாவட்டக் கழகச் செயலாளர்களாகவும்; தஞ்சாவூர் கிழக்கு, தஞ்சாவூர் மத்தியம் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட மாநகரக் கழகச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழக செயலாளராக தளவாய்சுந்தரம், திருச்சி மாநகர் மாவட்டக் கழக செயலாளராக J. சீனிவாசன், பெரம்பலூர் மாவட்டக் கழக செயலாளராக இளம்பை இரா.தமிழ்ச்செல்வன், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டம் கும்பகோணம் மாநகரக் கழக செயலாளராக ராம.ராமநாதன், தஞ்சாவூர் மத்திய மாவட்டம் தஞ்சாவூர் மாநகரக் கழக செயலாளராக  S.சரவணன் ஆகியோரை நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

தலைமைக் கழக அறிவிப்பு. pic.twitter.com/wcVjEn9h3j

— AIADMK (@AIADMKOfficial)

 

மேலும், அதிமுக தலைமை கழக செயலாளர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும் புதிதாக நியமனம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளராக இன்பதுரை, சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளராக அப்துல் ரஹீம், கொள்கை பரப்பு இணை செயலாளராக விந்தியா உள்பட பலர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் "புரட்சித் தமிழர்" திரு. அவர்களின் முக்கிய அறிவிப்பு.

கழக அமைப்பு ரீதியாக மாவட்டங்கள் பிரிப்பு. pic.twitter.com/bw1cgHIn0y

— AIADMK (@AIADMKOfficial)

 

அத்துடன்,  ராணிப்பேட்டை, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, தேனி, திருநெல்வேலி என செயல்பட்டு வந்த அதிமுக மாவட்டக் கழக அமைப்புகள் கழக அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

click me!