
வேலுர் மாவட்டம் காட்பாடியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர்.
தேசிய பேரிடர் மீட்புபடையினர் வரவழைக்கப்பட்டு இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைகாக அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர்.
அவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேர்கப்பட்ட பாக்கியராஜ் என்பவர் நேற்று இரவு உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவ்விபத்து குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்த பாக்கியராஜ் குடும்பத்திற்கு ரூ.5லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது குறித்து பொதுபணித்துறையினர் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.