
சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சல் தாக்குதலில் மரணமடைந்த தமிழக வீரர் சங்கருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சங்கரின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 20 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
சட்டீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது நக்ஸலைட்டுகள் பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.
இதில் 12 வீரர்கள் மரணமடைந்தனர். இவர்களில் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம் கழுமரம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரும் ஒருவர். இவர் அவில்தாராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சங்கரின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த அரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தமிழக அரசு வெளியிடுள்ள அறிக்கையில், 'சட்டீஸ்கரில் நேற்று நடைபெற்ற நக்சல் தாக்குதலில் பலியான தமிழக வீரர் சங்கரின் குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவிப்பாதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சங்கரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதாகவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்த தொகைக்கான காசோலை விரைவில் அவரது குடும்பத்திடம் சேர்க்குமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த அறிகைக்கையில் கூறப்பட்டுள்ளது.